பிக்பாஸ் தர்ஷன் சொன்ன குட்நியூஸ்.. ஹேப்பி மோடில் ஆர்மி.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷன், தனது முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த தர்ஷன், மிஸ்டர் இலங்கை பட்டத்தை வென்றிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பிக்பாஸ் வீட்டில் வனிதாவைக் கண்டு சக ஹவுஸ்மேட்ஸ்கள் அலறிய போதும் அவரை எதிர்த்து கேள்வி கேட்டார் தர்ஷன்.

பயந்த ஹவுஸ்மேட்ஸ்
பிக்பாஸ் வீட்டில் அல்லி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டு சண்டை மூட்டி விட்ட வனிதா மீது பிக்பாஸ் பார்வையாளர்கள் கடுமையான கோபத்தில் இருந்தார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களும் அவரிடம் வாயை கொடுக்காமல் அஞ்சி நடுங்கினர். வனிதாவை யாராவது எதிர்த்து பேசமாட்டார்களா என காத்திருந்தனர் பார்வையாளர்கள்.

ஏமாற்றம்
அப்போதுதான் வனிதா செய்த தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்டார் தர்ஷன். அதோடு யாராக இருந்தாலும் செய்த தவறுகளை முகத்துக்கு நேராக கேட்டதோடு மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார். இதனால் பெரும்பாலான மக்களின் ஆதரவையும் அன்பையும் பெற்றார். பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இறுதி வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

கமல் அறிவிப்பு
இதனால் அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள். ஆனால் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் நடிப்பார் என அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் கமல். இதனால் தர்ஷனின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது முதல் படத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரமாண்ட டீம் என்று கூறியுள்ள தர்ஷன், தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் குறித்து எந்த தகவலையும் கூறவில்லை. இன்னும் ஓரிரு நாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறியுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்
தர்ஷனின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நீங்கள் அதற்கு தகுதியானவர்தான் என்று கூறியுள்ள நெட்டிசன்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை காண ஆர்வமாக உள்ளோம் என்றும் கூறியுள்ளனர். இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளர்.


Click it and Unblock the Notifications











