பிரேக்கப்.. சர்ச்சை.. தத்துவம் சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. யாருக்கு பாஸ் என லந்து கொடுத்த நெட்டிசன்ஸ்!
சென்னை: காதல் சர்ச்சைகளில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் இன்ஸ்டாவில் கூறியிருக்கும் தத்துவத்தை பார்த்த நெட்டிசன்கள் யாருக்கு இது என கேட்டு வருகின்றனர்.
Recommended Video
இலங்கையை சேர்ந்தவர் தர்ஷன். மாடலான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்
பங்கேற்றார்.
இதில் தைரியமாகவும் நேர்மையாகவும் விளையாடியதால் மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்றார்.

ராஜ்கமல் பிலிம்ஸ்
தர்ஷன்தான் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் தர்ஷன். பிக்பாஸ் கைவிட்டாலும் அவரை கமல்ஹாசன் கைவிடவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பார் என அறிவித்தார்.

காதலி புகார்
இதனால் சந்தோஷப்பட்டனர் தர்ஷனின் ரசிகர்கள். இந்நிலையில் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி, பிக்பாஸுக்கு முன்பு தன்னுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட தர்ஷன் பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

காதல் பிரேக்கப்
இதனை தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறினர். இவர்களின் பிரச்சனையால் சமூக வலைதளங்களும் ஊடகங்களும் திக்குமுக்காடின. இதனை தொடர்ந்து இருவரும் தங்களின் காதலை பிரேக்கப் செய்வதாக அறிவித்தனர்.

சோஷியல் மீடியா
இருப்பினும் சனம் ஷெட்டியின் ரசிகர்கள் தர்ஷனை திட்டி தீர்த்தனர். பெண் பாவம் சும்மாவிடாது என சாபம் விடாத குறையாக வசை பாடினர். இருவருமே சமூக வலைதளங்களில் அவ்வப்போது தங்களின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உங்களை கொல்லாது
இந்நிலையில் தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம க்யூட்டான ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் தோல்வி உங்களை கொல்லாது.. அது ஏதாவது நடக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை அதிகரிக்கும் என கெவின் காஸ்ட்னரின் கோட்டை கூறியிருந்தார்.

வாட் எ கம்பேக்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை யாருக்கு தலைவா சொல்கிறீர்கள்.. என கேட்டு லந்து கொடுத்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள், வாட் எ கம்பேக் என கேட்டு புகழ்ந்துள்ளனர். இன்னும் பலர், இதையே உங்கள் மனதில் வைத்துக்கொண்டு போய்க்கொண்டே இருங்கள்.. இதுவும் கடந்து போகும் என்றும் தட்டிக்கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











