அய்யோ பத்திக்கிச்சு.. ஓரப் பார்வை.. டபுள் மீனிங் பேச்சு.. பிக்பாஸ் வீட்டின் முதல் காதல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் இரண்டு போட்டியாளர்களுக்குள் காதல் மலர்ந்திருப்பது புரமோவில் அரசல் புரசலாக தெரிந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, எதிர்பார்த்ததை தாண்டியும் செம சுவாரசியமாக செல்கிறது.
சண்டை சச்சரவு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சென்டிமெண்ட் என களைக்கட்டி வருகிறது.

காதல் மட்டும் மிச்சம்
காதல் மட்டும்தான் மிச்சமாய் இருந்தது. கடந்த மூன்று சீசன்களிலும் போதும் போதும் எனும் அளவுக்கு காதல் நிரம்பி வழிந்தது. குறிப்பாக பல கோண காதல் லீலைகள் அரங்கேறின. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே அபிராமிக்கு கவின் மீது காதல் வந்தது.

இளசுகள் ஏராளம்
ஆனால் இந்த சீசன் தொடங்கி 2 வாரங்களை நெருங்கும் நிலையில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் காதல் மலரவில்லை. இத்தனைக்கும் இம்முறை பிக்பாஸ் வீட்டில் இளசுகள் ஏராளம். பிக்பாஸ் வீட்டில் இதுவரை காதல் ட்ராக் இல்லாமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருந்தது.

கிட்சனில் கேபி..
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது புரமோவில் பாலாஜி முருகதாஸுக்கும் கேப்ரில்லாவுக்கும் இடையே ரிலேஷன்ஷிப் ஃபார்ம் ஆவதை போல தெரிகிறது. அந்த புரமோவில் கேப்ரில்லா கிட்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறார்.

கவலையே இல்லல்ல..
அப்போது அங்கு வரும் பாலாஜி முருகதாஸ், எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சே இன்னும் என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என ரொம்பவே உரிமையுடன் கேட்கிறார். அதனைக் கேட்ட கேப்ரில்லா, என்னவாம், அவ்ளோ நேரம் நான் பேசாமல் இருந்தது உனக்கு கவலையே இல்லல்ல என்று கூறுகிறார்.

உரிமையுடன் பேச்சு
அதனைக் கேட்ட பாலாஜி, நான் என்ன ஜோசியக்காரனா மைண்ட் வாய்ஸ கேட்ச் பண்றதுக்கு என்று கேட்கிறார். பின்னர் சார் உங்களுக்கு தெரியலையோ.. நடிக்காத என கேபியும் உரிமையுடன் பேச, நான் நடிக்கனும்ங்ற அவசியம் இல்லை, யார்க்கிட்டேயும் நடிக்க மாட்டேன் மூஞ்சுக்கு நேரா சொல்லிட்டு போயிடுவேன் என்கிறார் பாலாஜி.

டபுள் மீனிங் பேச்சு
அதற்கு இன்னும் நீ சொல்லலையே என டபுள் மீனிங்கில் பதில் சொல்கிறார் கேப்ரில்லா. பின்னர் இருவரும் அடித்துக்கொண்டு ஓடிப்பிடித்து விளையாடுகின்றனர். இதையெல்லாம் கூடவே இருந்து வேடிக்கை பார்க்கிறார் ஆஜித்.

யாருக்குள் இங்கு யாரோ..
சில ஷாட்டுகளில் கிட்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கேபியை ஓரக் கண்ணால் தூரத்தில் இருந்தப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலாஜி முருகதாஸ். இந்த புரமோவுக்கு பின்னணியில் யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை ஒலிபரப்பி உசுப்பி விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











