மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரி மிட் நைட்டில் தனது ரசிகரின் வீட்டுக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆடும் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆரி அர்ஜுனன்.
தொடர்ந்து ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வெற்றியை காணாத ஆரி
தற்போது எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான், பகவான், அலேகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுவரை பெரிதாக எந்த வெற்றியை காணாத ஆரி, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பெரும் ரசிகர் பட்டாளம்
இதில் கடைசி வரை அடுத்தவரை மதித்து, கண்ணியத்துடன் விளையாடினார். நேர்மை நிச்சயம் வெல்லும் என்று முடிவுடன் விளையாடிய ஆரி, ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். சமுக வலைதளங்ளிலும் ஆரிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது.

எல்லா புகழும் உங்களுக்கே..
பிக்பாஸ் வீட்டில் ஆரியை டார்கெட் செய்தவர்கள் அனைவரையும் வச்சு செய்தனர். இந்நிலையில் பிக்பாஸ் ட்ரோஃபியை தட்டிய கையோடு தனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி கூறினார் ஆரி. மேலும் எல்லா புகழும் உங்களுக்கே என்றும் டிவிட்டரில் கூறியிருந்தார்.

மிட் நைட்டில்..
அதன்பிறகு உடல் நிலை சரியில்லை, விரைவில் சந்திக்கிறேன் என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார் ஆரி. இந்நிலையில் நடிகர் ஆரி, தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு மிட் நைட்டில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.
திடீர் விசிட்..
இதில் மாஸ்க் அணிந்தப்படி உள்ளே செல்லும் ஆரியை பார்த்ததும் அந்த வீட்டில் உள்ளவர்கள் செம்ம ஹேப்பியாகி ஆரவாரம் செய்கின்றனர். தொடர்ந்து கேக்கை ஊட்டிவிடும் ஆரி அவர்களை கட்டியணைக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வேற லெவல்..
இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியை புகழ்ந்து வருகின்றனர். ஆரியின் திடீர் விசிட் வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி அண்ணா உங்களுடைய மனிதாபிமானம் வேற லெவல் வேற ஒன்னும் எனக்கு சொல்லத் தெரியவில்லை அண்ணா ஒவ்வொரு மனிதனையும் எப்படியெல்லாம் மதிக்கணும் என்று உங்களிடம் தான் நாங்கள் கற்றுக் கொண்டு இருக்கிறோம் அண்ணா என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











