உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகிழ்திருமேனி. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் உதயநிரி ஸ்டாலினுக்கு ஜோடியாக, நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார்.

படத்தில் இணைந்த ஆரவ்
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் பிக்பாஸ் தமிழ் முதல் சீசனின் டைட்டில் வின்னரான ஆரவ் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

மருத்துவ முத்தம்
ஆரவ் தற்போது மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ராஜபீமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான ஓவியாவுடன் நெருக்கமாக பழகினார். ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

காதலியுடன் திருமணம்
இந்நிலையில் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ராஹியை திருமண்மட செய்துக் கொண்டார். ராஹி தற்போது கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

முக்கிய கேரக்டர்
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆரவின் தந்தை மரணமடைந்தார். இந்நிலையில் ஆரவ் உதயநிதி ஸ்டாலின் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











