பள்ளிக்கூடம் டாஸ்க்கிற்காக ஹேர் கலரை மாற்றிய ஐக்கி.. அக்ஷரா.. நிரூப்ப விட்டுட்டீங்களே பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பள்ளிக்கூடம் டாஸ்க்கிற்காக ஐக்கி மற்றும் அக்ஷரா ஆகியோர் தங்களின் ஹேர் கலரை மாற்றினர்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூல் ஆனது.
இதில் சிபி வார்டனாகவும் ராஜு, அபிஷேக் ராஜா, அமீர் ஆகியோர் டீச்சராகவும் இருந்தனர்.

ரொம்ப சேட்டை
மற்ற போட்டியாளர்கள் அனைவருமே ஸ்டூடன்ட்ஸாக இருந்தனர். இந்த டாஸ்க்கில் பிரியங்கா ரொம்பவே சேட்டை செய்தார். பள்ளி மாணவ மாணவிகள் இப்படியெல்லாம் சேட்டை செய்வார்களா என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டார். தான் கெட்டது பத்தாது என மற்றவர்களையும் கெடுத்து டாஸ்க்கை சொதப்பினார்.

அடங்க மாட்றாங்க பிக்பாஸ்
அவர்களை கன்ட்ரோல் செய்ய முடியாமல், ஆசிரியர்களும் வார்டன்களும் திணறினர். இதனை பார்த்த பிக்பாஸ் வார்டன் சிபியை கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்து எல்லோரும் முறையாக நடந்து கொள்கிறார்களா என்று கேட்டார். அதற்கு சிலர் அடங்கவே மாட்டேங்கிறார்கள் என்று புகார் கூறினார் சிபி.

ஹேர் கலரை மாற்றிய ஹவுஸ்மேட்ஸ்
அதனை தொடர்ந்து பேசிய பிக்பாஸ், பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிமுறைகைள் ஒழுக்கம் உள்ளது என்றும், ஹேர் கலரிங் செய்துள்ள மாணவர்களை கறுப்பு நிறத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ஸ்டூடன்ட்ஸிடம் பிக்பாஸ் கூறியதை தெரிவித்த சிபி அக்ஷராவையும் ஐக்கியையும் ஹேர் கலரை மாற்றுமாறு கூறினார்.

பக்கா பள்ளி மாணவராக
இதேபோல் அபினய் மற்றும் வருணை தலையை எண்ணெய் தடவி படிய வாருமாறு கூறினார். மேலும் வருணை தாடியை ட்ரிம் செய்து விட்டு பள்ளிக்கு வருமாறும் கூறினார் சிபி. சிபியின் வார்த்தையை கேட்ட ஸ்டுடண்ட்ஸ் அவர் சொன்னபடியே தங்களின் ஹேர் கலரை மாற்றினர். மேலும் வருண் தலையை படிய வாரி தாடியை ட்ரிம் செய்து பக்கா பள்ளி மாணவரை போலவே இருந்தார்.

ஏன் முடி வெட்ட சொல்லவில்லை
ஆனால் நீளமான முடியை வைத்துள்ள நிரூப்பை மட்டும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் எந்த பள்ளியில் மாணவர்கள் இவ்வளவு நீளமான முடியுடன் வர அனுமதிக்கப்படுகிறார்கள் என கேட்டு வருகின்றனர். மேலும் அவரை மட்டும் முடி வெட்ட சொல்லாதது ஏன் என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











