செம்ம.. அர்ச்சனாவுக்கு செக் வைக்கும் பாலா.. நாமினேஷன் டாப்புள் கார்டை கொடுத்து அதிரவிட்ட பிக்பாஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது. இதில் பாலா, சோம், ஆரி, சனம், ரமேஷ், நிஷா, அனிதா ஆகிய 7 பேர் இடம் பெற்றனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் புதிதாய் ஒரு கான்செப்ட்டில் கொளுத்திப்போட்டு ரணகளப்படுத்தியுள்ளார்.

நாமினேஷன் லிஸ்ட்
அதாவது, நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள 7 போட்டியாளர்களுக்கு என ஸ்பெஷல் டாஸ்க் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது நாமினேஷனை மாற்றியமைக்கும் நாமினேஷன் டாப்புள் கார்டை அறிவித்துள்ளார் பிக்பாஸ்.

அதே பாணியில் டாஸ்க்
ஏற்கனவே எவிக்ஷன் ஃபிரி பாஸை கொடுத்து சுரேஷ் சக்கரவர்த்தியை குரூப்பிஸம் என்ற விஷயத்தில் இழுத்துவிட்டு கொளுத்திப் போட்டார். இந்நிலையில் தற்போது நாமினேஷன் டாப்புள் கார்டை அறிவித்து அதே பாணியில் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

ஒருவர் தப்பிக்கலாம்
தனியறையில் நடக்கும் இந்த டாஸ்க்கில் பங்கேற்கும் 7 பேரும் ஒவ்வொரு போட்டியாளராய் வெளியே அனுப்ப வேண்டும். அவர்களில் இறுதி வரை நிற்கும் போட்டியாளர் நாமினேஷன் டாப்புள் கார்டை கைப்பற்றி நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என தெரிகிறது.

சனத்துக்கு விட்டுக்கொடுப்பியா?
மேலும் தனக்கு பதிலாய் அவர் வேறு ஒரு நபரை நாமினேட் செய்யலாம் என்றும் தெரிகிறது. அப்போது ஆரி அனிதாவிடம் இருக்குறது நீங்க 3 பேர்தான். நீ சனத்துக்கு விட்டுக்கொடுக்க தயாராய் இருக்கிறாயா என்று கேட்கிறார்.

நான்தான் ரொம்ப டிசர்வ்
அதற்கு நோ வே என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறார் அனிதா. நிஷாவும் நான் விட்டெல்லாம் கொடுக்க முடியாது என்று கூறுகிறார். அப்போது பேசும் சனம் ஷெட்டி, இங்கு இருக்கும் பேரோட நான்தான் ரொம்ப டிசர்வ்ன்னு எனக்கு தோனுது என்கிறார்.

நாமினேஷனில் இல்லாத நபர்
இதனைக் கேட்டு கோபமாக எழுந்து செல்கிறார் ஜித்தன் ரமேஷ். அந்த அறைக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் லிவிங் ஏரியாவில் உள்ள டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. அப்போது பேசும் பிக்பாஸ், இந்த நாமினேஷன் கார்டை பெறும் நபர், அவருக்கு பதிலாய் நாமினேஷன் ஆகாத நபர்களில் ஒருவரை நாமினேட் செய்வார் என்று கூறுகிறார்.

அர்ச்சனாவுக்கு செக்
இதனை தொடர்ந்து நிஷா, ஆஜித்தை நாமினேட் செய்கிறார். பாலாஜி அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். அந்த அறைக்குள் நடக்கும் சம்பவங்களை டிவியில் பார்க்கும் ஆஜித், அர்ச்சனா உட்பட அனைத்து ஹவுஸ்மெட்டும் ஜர்க்காகின்றனர்.

சூடு பிடிக்கும்
இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெற்று நாமினேஷன் டாப்பிள் கார்டை பெற்று நாமினேஷனில் இருந்து தப்பிக்க போகிறார்கள்? யார் நாமினேஷனில் சிக்கப் போகிறார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். பிக்பாஸின் இந்த புதிய யுக்தியால் பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











