என்னடா பண்றீங்க.. ஸ்லோ மோஷன் டான்ஸ் டாஸ்க்கை கொடுத்து பிரேக் போட்ட பிக்பாஸ்.. ஒன்னொன்னும் ஒரு ரகம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றை தொடக்கமே அமர்க்களமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாய் நடைபெற்று வந்த அந்த டாஸ்க் இன்றுடன் நிறைவடைந்தது.

இதுதான் டஃப்பான டாஸ்க்
இந்த பிக்பாஸ் சீசனில் இதுவரை கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில் இதுதான் கொஞ்சம் டஃபான டாஸ்க்காக பார்க்கப்படுகிறது. 45 மணிநேரம் நடைபெற்ற இந்த டாஸ்கில் ஹவுஸ்மெட்ஸ் 3 பேர் கொண்ட 5 குழுக்களாக பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற அணி
ஒவ்வொரு குழுவை சேர்ந்த மூன்று பேரும் கடிகார முள்ளாய் பங்கேற்று மூன்று மணி நேரத்தை கணிக்க வேண்டும். இதில் சரியாக கணிக்கும் அணியே வெற்றி பெற்ற அணி என கண்டிஷன்கள் விதிக்கப்பட்டன.

மொக்கை டாஸ்க்குகள்
மொத்தம் மூன்று சுற்றுக்களாக இந்த டாஸ்க் நடத்தப்பட்டது. இரவு பகல் மழை வெயில் என இடைவிடாமல் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதற்கு இடையே இடையே ஹவுஸ்மெட்ஸ்களை உற்சாகப்படுத்தும் வகையில் சில மொக்கை டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டன.

அதுபோன்ற டாஸ்க்
ஜிப்ரிஷ் மொழியில் பேசுவது, ரிவெர்ஸ் டாஸ்க், சுண்டல் விற்பது, குல்ஃபி விற்பது, சுக்கு காப்பி விற்பது என அவ்வப்போது பொருமையை சோதித்தார் பிக்பாஸ். அந்த வகையில் இன்றைய எபிசோட் தொடங்கும் போதே அதுபோன்ற டாஸ்க்குடன் தொடங்கியது.

கண்ணுக்குள் நூறு நிலவு
அதாவது ஸ்லோ மோஷனில் டான்ஸ் ஆடும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்காக வேதம் புதிது திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணுக்குள் நூறு நிலவு பாடல் ஒளிபரப்பப்பட்டது. அந்த பாடலுக்கு ஹவுஸ் மெட்ஸ் ஸ்லோ மோஷனில் டான்ஸ் ஆடினர்.

ஆரம்பமே அமர்க்களம்
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்பை வைத்து ரகம் ரகமாகவும் விதவிதமாகவும் ஆட்டம் போட்டனர். பார்க்க காமெடியாக இருந்த டாஸ்க்கை சில ரசிகர்கள் ஆரம்பமே அமர்க்களம் என ரசித்தனர்.

கன்டென்ட் கிடைக்கலயா?
அதே நேரத்தில் சில ரசிகர்கள் வேற கன்டென்ட் கிடைக்கலையா பிக்பாஸ் ஏன் இவ்ளோ மொக்கையான டாஸ்க் என்றும் கழுவி ஊற்றினர். மேலும் ஒவ்வொரு போட்டியாளரின் பர்ஃபாமன்ஸையும் நெட்டிசன்கள் பங்கம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











