அட கொடுமையே.. நாமினேஷனில் இத்தனை பேரா.. அந்த வாயில்லா பூச்சிகளையும் இழுத்து விட்டுட்டிங்களே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது காட்டப்பட்டது.
சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

நாமினேஷன் புராசஸ்
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது தெரியவந்துள்ளது. வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்றும் நாமினேஷன் நடைபெற்றுள்ளது.

பட்டியலை சொன்ன பிக்பாஸ்
பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கார்டன் ஏரியாவில் உள்ள அவரவர் போட்டோக்கள் ஒட்டப்பட்ட பெடஸ்டன்ட்களுக்கு நேராக நிற்கின்றனர். அப்போது இந்த வாரம் நாமினேட் ஆனவர்களிள் பட்டியலை வாசிக்கிறார் பிக்பாஸ்.

ஷாக்கான கேபி
அதன்படி முதல் ஆளாக கேபியின் பெயரை சொல்கிறார் பிக்பாஸ். அதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சியாகிறார் கேபி.
அவரை தொடர்ந்து நாமினேஷனில் இடம் பெற்றுள்ள மற்ற போட்டியாளர்களின் பெயரை சொல்கிறர் பிக்பாஸ்,

9 போட்டியாளர்கள்
அதன்படி சம்யுக்தா, சுச்சி, அனிதா, ஷிவானி, அர்ச்சனா, பாலாஜி, ரம்யா, ஆஜித் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.

6 பேர் எஸ்கேப்
ஆரி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்துள்ளார். இதேபோல் ரியோ, நிஷா, சோம சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி ஆகிய 5 பேர் இந்த வாரம் ஹவுஸ்மெட்டுகளால் நாமினேட் செய்யப்படாமல் எஸ்கேப்பாகியுள்ளனர்.

வாயில்லா பூச்சிகள்
யார் யாரை நாமினேஷன் செய்துள்ளார்கள் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிடுபவர்கள், வாயில்லா பூச்சிகள் என்று அழைக்கப்படும் கேபி, ஷிவானி, ஆஜித் ஆகியோரும் நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











