Just In
- 14 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 15 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறுப்பேற்றிய அனிதா.டார்ச்சர் செய்து பழித்தீர்த்த பாலாஜி.கண்ணீர்விட்ட அர்ச்சனா.. மிரளவிடும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாலாஜி செய்த டார்ச்சரால் அர்ச்சனா கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் ஒரு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கால் செண்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

மண்ணை போட்ட பிக்பாஸ்
இதில் ஹவுமேட்ஸ் சீரியஸாக விளையாடாமல் கேம்மின் போக்கையே மாற்றி சொதப்பினர். இதனால் லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்ஸாக வெறும் 600 பாயிண்டுகள் மட்டுமே கொடுத்து மண்ணை அள்ளி போட்டார் பிக்பாஸ்.

புதிய மனிதா டாஸ்க்
இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் புரமோவில் தெரிய வந்துள்ளது. அதாவது, புதிய மனிதா என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 போட்டியாளர்கள் ரோபோக்களாகவும், 6 பேர் மனிதர்களாகவும் உள்ளனர்.

உணர்ச்சிகளை கொண்டுவர
இதில் பாலாஜி மனிதர்களின் தலைவராகவும், அர்ச்சனா ரோபோக்களின் தலைவராகவும் உள்ளனர். இதில் ஒவ்வொரு பஸர் அடிக்கும் போதும் மனிதர்கள் எந்திரங்களிடம் இருந்து, மகிழ்ச்சி, துக்கம், கோவம் என ஏதாவது இரண்டு உணர்வுளை கொண்டு வர எல்லாவிதமான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

ராஜா வீட்டு கன்னுக்குட்டி
இதில் மனிதராக உள்ள அனிதா, எந்திரன் பட சிட்டி ஸ்டைலில் மே என கத்துகிறார். மேலும் தொடர்ந்து பேசும் அனிதா, மேக்கப் ரோபோ என ஷிவானியை வெறுப்பேற்றுகிறார். இதேபோல் ராஜா வீட்டு கன்னுக்குட்டி என்று ரமேஷை சீண்டுகிறார்.

பாஸ்ஸி ரோபோ
பாஸ்ஸி ரோபோ என்று அர்ச்சனாவையும் கோபப்படுத்துகிறார். மேலும் சோம சேகரை பப்பட் ரோபோ என்றும் என்ன சொன்னால் யாருக்கு கோபம் வருமோ அந்த யுத்தியை கையில் எடுக்கிறார்.

முகத்தில் முட்டையை தடவி
இதன் உச்சக்கட்டமாக பாலாஜியும் அனிதாவும் சேர்ந்து அர்ச்சனாவை கதறவிட்டனர். அதாவது முட்டையை உடைத்து அர்ச்சனாவை அவரது முகத்தில் தடவ சொல்கிறார் பாலாஜி. மேலும் கையை மூக்குக்கிட்டேயே வையுங்கள் என்றும் சொல்கிறார்.

பதற வைக்கிறது
பாலாஜி சொன்னதை செய்யும் ரோபோ தலைவரான அர்ச்சனா, கண்ணீர் விட்டப்படியே அதையெல்லாம் செய்துவிட்டு அப்படியே நிற்கிறார். பார்க்கும் போதே பதற வைக்கிறது இந்த புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் இருக்கு இன்னைக்கு என்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என கூறி வருகின்றனர்.