ஒரு வழியாய் முடிந்த மணிக்கூண்டு டாஸ்க்.. வெற்றி பெற்றது யாருன்னு பாருங்க.. செம்ம டிவிஸ்ட்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து 45 மணி நேரம் நடைபெறும் இந்த டாஸ்க் இன்றுடன் நிறைவடைகிறது.

கார்டன் ஏரியாவில் கடிகாரம்
இதில் ஹவுஸ்மெட்ஸ் மூன்று மூன்று பேராக 5 அணிகளாக பிரிந்து மூன்று மணி நேரத்தை துல்லியமாக கணக்கிட வேண்டும். டாஸ்க்கில் பங்கேற்கும் மூன்று பேரும், பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் அமைக்கப்பட்டிருந்த கடிகாரம் போன்ற புராபர்ட்டியில் சின்ன முள், பெரிய முள் மற்றும் நொடி முள்ளாக நின்றனர்.

மூன்று மூன்று பேராக
இதில் அனிதா, சனம், நிஷா ஒரு டீமாகவும், பாலா, சுச்சி, ரம்யா ஒரு டீமாகவும் இருந்தனர். இதேபோல் ஆரி, ரியோ, கேபி மற்றும் அர்ச்சனா, சம்யுக்தா ஒரு டீமாகவும் சோம சேகர் ஆகியோர் ஒரு டீமாகவும் இருந்தனர். மேலும் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ஆஜித் ஆகியோர் ஒரு டீமாகவும் இருந்தனர்.

முடிவுக்கு வந்த டாஸ்க்
இதில் பாலாஜி டீமை தவிர மற்ற டீம்கள் பொறுப்புடன் விளையாடின. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதில் 45 மணி நேர டாஸ்க்கு முடிவுக்கு வருவதாக தெரிய வந்துள்ளது.

காத்திருக்கும் ஹவுஸ்மெட்ஸ்
இதனை முன்னிட்டு வெற்றி பெற்ற டீம் எது என்பதை அறிய லிவிங் ஏரியாவில் அமர்ந்து கேட்க ஆர்வமாய் காத்திருக்கின்றனர் ஹவுஸ்மெட்ஸ். ஒவ்வொரு டீமும் எவ்வளவு நேர வித்தியாசத்துடன் டாஸ்க்கை முடித்திருக்கிறார்கள் என்று பிக்பாஸ் டிவியில் ஒளிபரப்படுகிறது.

18 நிமிடங்கள்தான் வித்தியாசம்
இதில் அர்ச்சனா, சம்யுக்தா மற்றும் சோம் ஆகியோரின் டீம் 18 நிமிடங்கள் டிஃபரன்ஸில் டாஸ்க்கை முடித்துள்ளனர். மூன்று சுற்றுகளிலும், 3 மணி நேரத்தை சில நிமிடங்கள் டிஃபரன்ஸிலேயே இந்த டீம் கணித்துள்ளது.

56 நிமிஷம்
அவர்களை தொடர்ந்து ஆரி, ரியோ, கேபி டீம் 56 நிமிடங்கள் டிஃபரன்ஸில் மூன்று ரவுண்டு டாஸ்க்குகளையும் கணித்துள்ளனர். போட்டியின் போது மிக நெருக்கமாக ஆரியின் டீமே கணித்ததாக காட்டப்பப்பட்டது.

எதிர்பார்த்த டீம் இல்லை
ஆனால் அர்ச்சனா டீம் முதலிடத்தை பிடித்தது புரமோவில் தெரியவந்துள்ளது. ஆரியின் டீமே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அர்ச்சனாவின் டீம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் 6 பேர்
கடிகார டாஸ்க்கில் வெற்றி பெற்ற டீமை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 6 பேர் இந்த வார கேப்டன்ஸி டாஸ்க்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்றுள்ள ஹவுஸ்மெட்ஸ் தங்களின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











