உள்ளே பேச வைத்து வெளியே லைவ் பண்ணிய பிக்பாஸ்.. வசமாக சிக்கிய சுரேஷ்.. கட்டம் கட்டும் ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் மொத்த ஹவுஸ்மேட்ஸும் சேர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டம் கட்டும் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை முதலே வெளியான ஒவ்வொரு புரமோவும் அனலை கிளப்பி வருகிறது.

அதன்படி முதல் புரமோவில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டின் எவிக்ஷன் ஃபிரி பாஸை கைப்பற்ற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

சுரேஷ் பேசுகிறார்

சுரேஷ் பேசுகிறார்

இதில் சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 8 பேரும் பங்கேற்பதாகவும் அவர்களில் இருந்து ஒவ்வொருவராய் வெளியேறுவதாகவும், இதில் சுரேஷ் முடிவு எடுத்து பேசுவதாகவும் இருந்தது.

சாப்பிட்ட சுரேஷ்

சாப்பிட்ட சுரேஷ்

அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரமோவில் வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் மல்லுக்கட்டுகிறார். வேட்டியில் ஏற்பட்ட சண்டையாக தெரிந்தது அந்த புரமோ. வேல்முருகன் அவ்வளவு ஆவேசமாக பேசிய போதும் அதற்கெல்லாம் அசராத சுரேஷ் சக்கரவர்த்தி கூலாக டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எகிறும் ஹார்ட் பீட்

எகிறும் ஹார்ட் பீட்

அதனை பார்த்த நெட்டிசன்கள், மொட்டை அங்கிளுக்கு ரொம்ப தில்லுதான் என அதகளப்படுத்தினர். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. பார்க்கும் போதே ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது.

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

காரணம், எவிக்ஷன் ஃபிரி பாஸை பெறுவதற்காக சுரேஷ் சக்கரவர்த்தி ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசியதை அப்படியே வெளியில் உள்ள டிவியில் ஒளிபரப்பி பயங்கரமாக கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ். இந்த புரமோவில் இங்கே குரூப்பிசம் இருக்கு, இங்கு எல்லாரும் சேர்ந்து என்ன கார்னர் பண்றாங்க என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

எல்லை மீறும் ரியோ

எல்லை மீறும் ரியோ

அதை டிவியில் பார்த்த மற்ற ஹவுஸ்மேட்ஸ், வெளியே வரும் சுரேஷ் சக்கரவர்த்தியை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்குகின்றனர். முதல் ஆளாக வாயை திறக்கும் ரியோ ராஜ், குரூப்பீசம் இருக்குன்னு கண்டுபிடிச்சீங்கள்ல, என கேட்க ஆமாம் என்கிறார் சுரேஷ்.

கட்டம் கட்டும் ஹவுஸ்மேட்ஸ்

கட்டம் கட்டும் ஹவுஸ்மேட்ஸ்

அதற்கு சூப்பர்.. எப்போ கண்டுபிடிச்சீங்க என்று ரியோ கேட்க, அந்த கேம் அதோடு முடிஞ்சுடுச்சு.. என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார் சுரேஷ். உடனே அனிதா சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா என எல்லோரும் ஏதேதோ பேச.. இனிமேதான் கேம்மே ஆரம்பம் என்கிறார் சனம் ஷெட்டி.

சோஃபாவை அடித்த ரியோ

சோஃபாவை அடித்த ரியோ

உடனே ரியோ.. அதுக்குதான் யாரையும் பேசாதீங்க என்றேன்.. எஸ்கேப் ஆயிட்டாரு.. எனக்கூறி சோஃபாவை அடிக்கிறார். இப்படியாக உள்ளது மூன்றாவது புரமோ. இதன் மூலம் எவிக்ஷன் ஃபிரி பாக்ஸை சுரேஷ் சக்கரவர்த்தியின் கையில் கொடுத்துவிட்டு, ஹவுஸ்மேட்களை வைத்து அவரை கார்னர் செய்து வெளியேற்றப்பார்க்கிறார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X