நிஷாவுக்கு ஐ லவ் யூ சொல்லி ஆசை காட்டி..கடைசியில் இப்படி ஆகிப்போச்சே.. பிக்பாஸ் செய்த தரமான சம்பவம்!
சென்னை: நிஷாவை செல்லமாக அழைத்து ஐ லவ் யூ என்று கூறி கடைசியில் அசிங்கப்படுத்திவிட்டார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரும் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பொங்கல் செலிபிரேஷன் மற்றும் ஃபினாலே வார கொண்டாட்டத்திற்காக எவிக்ட்டான மொத்த ஹவுஸ்மேட்ஸும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

காமெடி தொகுப்பு
இதனால் பிக்பாஸ் வீடே ஃபினாலே களைக்கட்டியுள்ளது. அவர்களுக்கு ஃபன் டாஸ்க்குகள் பலவும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இதுவரை நடந்த சம்பவங்கள் காமெடி தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டது.

மறக்க முடியாத சம்பவங்கள்
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டீற்கு விருந்தாளிகளாக வந்துள்ள எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸ் வீட்டில் தங்களால் மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் நிஷாவை தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள அழைத்தார் பிக்பாஸ்.

செம வெயிட் லாஸ் போல
அப்போது நிஷு என செல்லமாக அழைத்த பிக்பாஸ், செம்ம வெயிட் லாஸ் போல.. டயட்டா என்று கேட்டு கலாய்த்தார். இதனால் ஹேப்பியான நிஷா, தேங்க்யூ பிக்பாஸ் போறதுக்குள்ள ஐ லவ் யூன்னு சொல்லிடுங்க என்றார்.

நிஷு ஐ லவ் யூ
அதனைக் கேட்ட பிக்பாஸ், நிஷு ஐ லவ் யூ என்றார். அவ்வளவு தான் ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸும் செம ஷாக்காயினர். தலைக்கால் புரியாமல் வீடு முழுக்க சுற்றி சுற்றி வந்தார் நிஷா. தரையில் விழுந்து சிரித்தார். இல்லாத சேட்டையெல்லாம் செய்தார்.

காமெடி நல்லா இருந்துச்சா
பின்னர் ஒருவழியாக வந்து நின்று தேங்க் யூ பிக்பாஸ் என்று கூறி தனது அனுபவங்களை பகிர தொடங்கினார் நிஷா. அப்போது குறுக்கிட்ட பிக்பாஸ், என்ன நிஷா.. காமெடி நல்லா இருந்துச்சா என்று கேட்டார்.

நீங்களுமா பிக்பாஸ்
அவ்வளவு தான் நிஷாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. அர்ச்சனா, ரியோ, கேபி என அனைவரும் நிஷா , பிக்பாஸால் தரமாய் கலாய்க்கப்பட்டதை பார்த்து கொண்டாடினர். இதனால் நொந்துப் போன நிஷா, நீங்களுமா பிக்பாஸ் என்று கேட்டு ஃபீலானார்.


Click it and Unblock the Notifications











