முழுக்க காசு.. தீனி.. அல்ப.. நிஷாவை கழுவி ஊற்றிய ரியோ.. அலற வைக்கும் அன்சீன் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவை ரியோ மரண கலாய் கலாய்க்கும் அன்சீன் புரமோ வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும் பல நிகழ்வுகள் நிகழ்ச்சியில் காட்டப்படுவதில்லை. அந்த அன்சீன் நிகழ்வுகள் விஜய் மியூஸிக் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் மியூஸிக் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

கடிதம் எழுதும் டாஸ்க்
அந்த வகையில் இன்றைய அன்சீன் புரமோவில், ரியோ அறந்தாங்கி நிஷாவை கலாய்க்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதன்படி, இன்று பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மெட்டுகளுக்கு கடிதம் எழுதும் கொடுக்கப்பட்டது இரண்டாவது புரமோவில் தெரியவந்தது.

அழுத அர்ச்சனா சாம்..
இதில் ஹவுஸ்மெட்ஸ் தீபாவளியை கொண்டாட நினைக்கும் தங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு கடிதம் எழுதினர். கடிதம் எழுதும் போதே அர்ச்சனா சம்யுக்தா உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதனர்.

ரியோ கலாய்..
இதனால் பிக்பாஸ் வீடு சோகமாக காட்சியளித்தது. இந்நிலையில் இந்த கடித விவகாரத்தை வைத்து நிஷாவை அந்த புரமோவில் கலாய்த்துள்ளார். அதாவது நீ எழுதிய லெட்டரில் சும்மா பேருக்குதான் அம்மாவையும் புருஷனையும் சேர்த்திருக்க. மத்த எல்லாத்துலேயும் ஸ்வீட், காசு, போனஸ்தான்.

காசு தீனி.. அல்ப..
போ அல்ப.. சும்மா ஒரு எமோஷ்னலுக்காக அம்மா பேரையும் புருஷன் பேரையும் எழுதிட்டு, லெட்டரோடு ஃபுல் மோட்டிவ் எதுல இருக்கு.. காசு.. தீனி.. என நிஷாவை மரணமாய் கலாய்க்கிறார் ரியோ.

ரெண்டும் தாண்டா முக்கியம்
அதையெல்லாம் சிரித்தப்படியே கேட்கும் நிஷா, அது ரெண்டும் தாண்டா முக்கியம் என கூறுகிறார். இப்படியாக உள்ளது அந்த அன்சீன் புரமோ. இந்த அன்சீன் புரமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











