பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே குவியும் வாய்ப்பு... வருண் கைவசம் உள்ள படங்களை பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வருண் கைவசம் உள்ள படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் வருண். பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள வருண், தனது ஸ்டைலில் விளையாடி வருகிறார்.
யாரையும் அதிகம் ஹர்ட் செய்யாமல் யாரிடமும் அதிகம் சண்டை போடாமல் இருந்து வருகிறார். சக போட்டியாளரான அக்ஷரா தாமரை செல்வி, ராஜு மற்றும் சிபி ஆகியோருடன் நல்ல நட்பையும் கொண்டுள்ளார்.

ஐசரி வேலனின் பேரன்
இந்நிலையில் வருண் குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, எளிதாக சினிமாவில் நடிகராக மலர்ந்தவரல்ல நடிகர் வருண். அவரது பயணம் படிப்படியானது. இவருடைய தாத்தா புகழ்பெற்ற நடிகர் ஐசரி வேலன் மற்றும் அவரது மாமா சிறந்த தொலைநோக்கு பார்வையாளரான டாக்டர். ஐசரி K கணேஷ்.

குரூப் டான்சராக..
இருவரிடமிருந்தும் சினிமாவின் பாரம்பரிய ஞானத்தைப் பெற்ற திறமையான நடிகர் வருண், அவர் ஒரே இரவில் சினிமாவில் நாயகனாக முயற்சிக்கவில்லை. திரைப்படங்களில் குரூப் டான்சராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்( விஜய்யின் தலைவா படத்தில் அவரது முகம் நன்றாக அறியப்பட்டது).

பப்பி என்ற படத்தின் மூலம்
தீராத ஆர்வம், இடைவிடாத உழைப்பு, எல்லாவற்றையும் விட நேர்மறை எண்ணம் அவரை மேலும் அழகுபடுத்தியது. சிறிய வேடங்களில் கூட அவரது அர்ப்பணிப்பு, அவரது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருந்தது, இறுதியாக, 'பப்பி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ரசிகர்கள் பேராதாரவுடன் நாயகனாக அவர் திரையில் அறிமுகமானார்.

ஆக்ஷன் ஹீரோவாக
'ஜோஷுவா' திரைப்படம் மூலம் அதிரடியான ஆக்ஷன் ஹீரோவாக அவரது அவதாரம் அவரை தமிழ் சினிமாவில் அனைவரிடத்திலும் மிகவும் விரும்பத்தக்க நடிகராக மாற்றியுள்ளது. தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் வருண், ரியாலிட்டி டிவி ஷோவில் Mr. Positive-ஆக இருப்பதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் பையனாக மாறிவிட்டார்.
Recommended Video

அடுத்ததாக 3 படங்களில்
ஜோஷுவா திரைப்படம் உலகமெங்கிலும் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. மேலும் அடுத்ததாக வருண் மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் ஜோஷ்வா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று வேக் அப் பாடலாக ஒலிபரப்பப்பட்டது. அப்போது தான் அந்த படத்தில் நடித்துள்ளது குறித்து வருண் கூறினார் என்பது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications











