பிக்பாஸ் குவாரண்டைனில் இருந்து திடீரென வெளியேறிய வைல்டு கார்ட் ஆசிம்.. வெளியான அதிர்ச்சி காரணம்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரியாக குவாரண்டைனில் இருந்த ஆஸிம் திடீரென வெளியேறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுச்சி ஆகிய 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா மற்றும் சுச்சி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர்.

ஹோட்டலில் குவாரண்டைன்

ஹோட்டலில் குவாரண்டைன்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் மூன்றாவது வைல்டு கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஆசிம் பங்கேற்க உள்ளார் என கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆசிம் கொரோனா சோதனை முடிந்து 15 நாட்கள் குவாரண்டைனில் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

பகல் நிலவு சீரியல்

பகல் நிலவு சீரியல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுச்சி வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆசிம், வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே ஆசிமும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி நாராயணனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் இணைந்து நடித்தனர்.

ஒருதலையாக காதலித்த ஷிவானி

ஒருதலையாக காதலித்த ஷிவானி

அந்த சீரியலின் போது ஷிவானிக்கும் ஆசிமுக்கும் காதல் என தகவல் பரவியது. ஆனால் ஷிவானிதான் ஆசிமை ஒன் சைடாக காதலித்தார் என்றும் ஆசிம் அவரது காதலை ஏற்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஆசிம் தனது காதலை ஏற்காததால் ஷிவானி அந்த சீரியலில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார்.

ஷிவானியின் உண்மை முகம்

ஷிவானியின் உண்மை முகம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது பாலாஜியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் ஷிவானி. தங்களுக்குள் இருப்பது நட்புதான் என்று ஷிவானி சொன்னாலும் பாலாஜியுடனான அவரது நடவடிக்கை நட்பையும் தாண்டியதாகவே தெரிகிறது என்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஷிவானியின் உண்மை முகத்தை கொண்டு வரவே பிக்பாஸ் ஆசிமை களமிறக்குவதாக கூறப்பட்டது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இதனால் ஆசிம் பங்கேற்கும் எபிசோடையும் ஆசிம் என்ட்ரியை பார்த்து ஷிவானி எப்படி ரியாக்ட் செய்வார் என்பதையும் காண பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில்தான் குவாரண்டைனில் இருந்து ஆசிம் திடீரென வெளியேறிய தகவல் வெளியாகியுள்ளது.

வெளியேறிய ஆசிம்

வெளியேறிய ஆசிம்

அதாவது சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆசிமை பார்த்ததாக தகவல் வெளியானது. இதனால் அவர் குவாரண்டைனில் இருந்து வெளியேறிவிட்டாரா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது.

அம்மாவுக்கு உடல்நலக்குறைவு

அம்மாவுக்கு உடல்நலக்குறைவு

இந்நிலையில் அவர் எதற்காக மருத்துவமனைக்கு சென்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆசிமின் அம்மா ஜனத்துக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாக அவரை பார்க்க ஆசிம் மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவந்துள்ளது.

நாளை என்ட்ரியாகலாம்

நாளை என்ட்ரியாகலாம்

இரண்டு நாட்கள் தனது அம்மாவுடன் இருந்த ஆசிம் மீண்டும் குவாரண்டைனுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நாளை அல்லது வரும் நாட்களில் ஆசிம் பிக்பாஸ் வீட்டுக்குள் நிச்சயம் என்ட்ரி கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X