அம்மாவை பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்து கதறி அழுத அனிதா சம்பத்.. கலங்க வைத்த பிக்பாஸ் புரமோ!

சென்னை: செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் வீட்டில் தனது தாயை பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்து கதறி அழும் புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

கண்ணீர்விட்ட Anitha Sampath | Emotional moment | Promo 1

பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் 16 போட்டியாளர்களில் ஒருவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். விஜே அர்ச்சனா பங்கேற்பது கேள்விக்குறியான போது, அனிதா பங்கேற்பதிலும் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனாலும் அசத்தலாய் பிக்பாஸில் என்ட்ரி கொடுத்தார் அனிதா சம்பத். பிக்பாஸ் மேடையிலேயே படபடவென பேசி பலரையும் கவர்ந்தார்.

இன்றைய புரமோ

இன்றைய புரமோ

நேற்று பிக்பாஸ் வீட்டில் டிக் டிக் விளையாட்டை ஆரம்பித்து ஹவுஸ் மேட்ஸ்களை ஓட விட்டார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. நேற்றைய புரமோக்கள் ஷிவானி நாராயணன், மற்றும் ரம்யா பாண்டியனை மையப்படுத்தி இருந்த நிலையில் இன்றைய புரமோ அனிதா சம்பத்தை மையப்படுத்தி உள்ளது.

நிஷாவுக்கு ஹார்ட்

நிஷாவுக்கு ஹார்ட்

அதாவது நேற்றைய எபிசோடின் தொடர்ச்சிதான் இந்த புரமோ. தொடர்ந்து போட்டியாளர்கள் ஹார்ட்டையும் புரோக்கன் ஹார்ட்டையும் கொடுத்து வருகின்றனர். அப்போது அறந்தாங்கி நிஷாவுக்கு காதல் சின்னமான ஹார்ட்டை கொடுக்கிறார் அனிதா சம்பத்.

கதறி அழுத அனிதா

கதறி அழுத அனிதா

தொடர்ந்து நிஷாவுக்கு ஹார்ட் கொடுத்ததற்கான காரணத்தை கூறும் அனிதா எமோஷனலாகி கதறி அழுதுவிட்டார். அவர் பேசியிருப்பதாவது, நிஷா அக்கா, எங்க அம்மா மாதிரி இருக்காங்க, எங்க அம்மா ரொம்ப டார்க்கா இருப்பாங்க. அவங்க நான் ஜூவல்ஸ் போட மாட்டேன், போட்டா என் கலர் இன்னும் டார்க்கா தெரியும்னு சொல்வாங்க.

ஸ்டாரா ஷைன் ஆகுறாங்க

ஸ்டாரா ஷைன் ஆகுறாங்க

ஸ்கூல் காலேஜ்லலாம் பேரண்ட்ஸ் மீட்டிங், ஃபங்கனுக்கு வரல்லாம் ரொம்ப யோசிப்பாங்க. ஆனால் நிஷா அக்கா அந்த டார்க் அப்படிங்கறது, தாழ்வா நினைக்காம அதை காமெடியா மாத்தி, எல்லாருக்கும் நடுவுல ஒரு ஸ்டாரா ஷைன் பண்றாங்க.. எங்க அம்மா இதை நிஷா அக்காக்கிட்டே இருந்து கத்துக்கணும்னு நினைக்கிறேன் என்கிறார்.

ஸ்வீட்டா சொல்லிட்டீங்க

ஸ்வீட்டா சொல்லிட்டீங்க

அனிதாவின் இந்த உருக்கமான பேச்சைக் கேட்ட அறந்தாங்கி நிஷா அவரை வாரி அணைத்து ஆறுதல் படுத்துகிறார். இப்படியாக உள்ளது இந்த பிக்பாஸின் இரண்டாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் எவ்ளோ பெரிய விஷயத்த இவ்ளோ சிம்பிளா ஸ்வீட்டா சொல்லிட்டிங்க என்று கூறியுள்ளனர்

அரசியல் இருக்குமோ

அரசியல் இருக்குமோ

இருந்தாலும் இதற்கு பின் ஏதாவது அரசியல் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.. எல்லாம் ஜித்தன் ரமேஷுக்குதான் வெளிச்சம்.. இருப்பினும் நீங்கள் இந்த விஷயத்தை சொன்ன விதம் எங்களுக்கு பிடித்து இருக்கிறது என கமெண்ட் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X