பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Losliya வின் தந்தை மரியநேசன் காலமானார்.. லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் லாஸ்லியா மரியநேசன்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

சேரனை போன்று இருப்பார்

சேரனை போன்று இருப்பார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சக போட்டியாளரான இயக்குநர் சேரனை தனது அப்பா, உங்களை போன்று தான் இருப்பார் என கூறி, சேரப்பா சேரப்பா என்றே அழைத்து வந்தார். இயக்குநர் சேரனை தனது அப்பா ஸ்தானத்தில் வைத்து நெருக்கமாக பழகி வந்தார் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டில் சந்திப்பு

பிக்பாஸ் வீட்டில் சந்திப்பு

தங்களின் குடும்பத்திற்காக கடந்த 10 ஆண்டுகள் தங்களை விட்டு பிரிந்து கனடாவில் பணிபுரிந்து வருவதாக கூறி தனது அப்பா மீது கொண்ட அன்பை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் லாஸ்லியா. 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது அப்பாவை சந்தித்தார் லாஸ்லியா.

லாஸ்லியா தந்தை மரணம்

லாஸ்லியா தந்தை மரணம்

அப்போது அவரது அப்பாவை பார்த்து லாஸ்லியா கதறி அழுதது பெரும் வைரலானது. அந்தக் காட்சி இன்னமும் பலரது கண்களைவிட்டு மறையவில்லை. இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தை இலங்கை ஊடகங்களும் உறுதி படுத்தியுள்ளன.

ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி

லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த தகவலைகேட்ட அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். #Losliya என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரென்ட்டாகி வருகிறது.

எப்படி தாங்க போகிறார்

எப்படி தாங்க போகிறார்

அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட லாஸ்லியா இந்த இழப்பை எப்படி தாங்கிக் கொள்ள போகிறார் என வேதனை தெரிவித்து வருகின்றனர். பலரும் லாஸ்வியாவின் தந்தை மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பறித்துவிட்டாய் இறைவா

லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த தகவலை கேட்ட இந்த ரசிகர், தந்தை ஒரு தேசத்தில் தாய் தங்கைகள் மறு தேசத்தில் பிரியங்கா பிரிந்த சோகத்திலும் இறப்பிலும் இணைய முடியா கொடுமை என் தங்கையை ஆறுதல் படுத்துங்கள் அவள் எப்படி இதை தாங்கி தைரியம் ஆவாள்
என் தங்கையின் வாழ்வையே தகப்பனை எடுத்து பறித்து விட்டாய் இறைவா என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தந்தை போற்றும் மகளாக

மற்றொரு ரசிகரான இவர், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் சற்று முன் காலமானார். ஆழ்ந்த இரங்கல்!! தந்தை போற்றும் மகளாக வாழ் என் சகோதரி.. உன்னுடன் என்றும் இருக்கிறேன் - உன் அண்ணன் நான் என பதிவிட்டுள்ளார்.

கட்டியணைத்த போட்டோ

லாஸ்லியாவின் தந்தை காலமானார்.. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.. என பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா தனது தந்தையை கட்டியணைத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X