2013ல் பாலிவுட்டை பரபரக்க வைத்த சர்ச்சைகள்
மும்பை: 2013ம் ஆண்டில் பாலிவுட்டை பரபரக்க வைத்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.
2013ம் ஆண்டு இப்பொழுது தான் துவங்கியது போன்று இருந்தது. ஆனால் அதற்குள் இந்த ஆண்டு முடியவிருக்கிறது. மக்கள் 2014ம் ஆண்டை வரவேற்கத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் 2013ம் ஆண்டில் பாலிவுட்டை பரபரக்க வைத்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம்.

ஜியா கான்
கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜியாவின் அம்மா ராபியாவோ தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

ஷாருக்கான்
ஷாருக்கானின் 3வது குழந்தையான ஆப்ராம் வாடகைத் தாய் மூலம் பிறந்தது. இந்நிலையில் வாடகை தாயின் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்தார் ஷாருக்கான் என்று அவருக்கு எதிராக சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஷாருக்கான் மறுத்தார்.

வருண் தவான்
நடிகர் வருண் தவான் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுக்கு தெரிந்த வியாபாரியிடம் இருந்து பொருள் வாங்கிக் கொண்டு பணம் தரவில்லை. இதையடுத்து அந்த வியாபாரி சொஹைலிடம் இது குறித்து கூற அவர் வருணை தேடிச் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட சொஹைல் வருணை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்தனர்.

சல்லு-ஷாருக்
பாலிவுட்டின் எலியும், பூனையுமான சல்மான் கானும், ஷாருக்கானும் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கி அளித்த இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதுடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். பரம எதிரிகளான ஷாருக்கும், சல்மானும் கட்டிப்பிடித்த காட்சியை பார்த்து பாலிவுட்டே ஆச்சரியப்பட்டது.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃபும், ரன்பிர் கபூரும் காதலர்கள் என்று பேசப்பட்டது. ஆனால் இதை மறுத்த அவர்கள் ஜோடியாக ஸ்பெயினுக்கு சென்று வந்தனர். அங்கு கத்ரீனா பிகினி அணிந்து ரன்பிருடன் கடற்கரையில் நடந்து வரும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியது. இதை பார்த்த கத்ரீனா பதறிப்போய் அறிக்கை வெளியிட ரன்பிரின் பெற்றோர் ஒரு பக்கம் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிறர் மூக்கை நுழைத்ததை நினைத்து கோபப்பட ஒரே பரபரப்பாகிவிட்டது.

மோனா சிங்
இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் நடிக்கும் மோனா சிங் நிர்வாணமாக இருக்கும் எம்.எம்.எஸ். வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலியான எம்.எம்.எஸ். என்று மோனா கதறினார். இந்த சம்பவத்தால் அவரது காதல் முறிந்து போனது.

வின்டு
பழம்பெரும் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்டு தாரா சிங் ஐபிஎல் பெட்டிங் வழக்கில் கைதானார். அவர் கைதை அடுத்து பிற பாலிவுட் பிரபலங்களுக்கும் பெட்டிங்கில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

தனிஷா
கஜோலின் தங்கை தனிஷா குடும்பத்தாரின் விருப்பத்திற்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் அவர் முன்னாள் நடிகர் அர்மான் கோஹ்லியுடன் படுக்கையில் ஆடை இன்றி நெருக்கமாக இருக்கும் காட்சி வீடியோவில் பதிவானது. இந்த காட்சி தனிஷா குடும்பத்தாரை மட்டுமின்றி பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











