ஜீ தமிழில் பிக் பாஸை விட பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோ... தொகுத்து வழங்கும் பிரபல நடிகர்!

சென்னை : பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை தொடர்ந்து முன்னணியில் இருக்கும் ஜீ தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புதுப் புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ ஒன்றை சினிமா பிரபலங்களை மட்டுமே வைத்து தனித்தீவில் நடத்த ஜீ தமிழ் தயாராகிக் கொண்டுள்ளது. பிரபல முன்னணி நடிகர் இதனைத் தொகுத்து வழங்க உள்ளார்.

மிகப்பெரிய ஹிட்

மிகப்பெரிய ஹிட்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கும் ஜீ தமிழ் புதுப் புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் வரை ஒளிபரப்பப்படும் அத்தனை ஷோக்களும் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

பாலிவுட்டை தொடர்ந்து தமிழிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4 சீசன்களை கடந்துள்ளது. இதில் போட்டியாளர்களாக பல்வேறு கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஒருவீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. கடந்த நான்கு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

முற்றிலும் பிரம்மாண்டமாக

முற்றிலும் பிரம்மாண்டமாக

இந்த நிலையில் ஜீ தமிழ் இன்னும் ஒருபடி மேலே போய் பிக்பாஸை விட பிரம்மாண்டமான முற்றிலும் புதுமையான ரியாலிட்டி ஷோ ஒன்றை களமிறக்க தயாராகிக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக உருவாகும் இந்த ரியாலிட்டி ஷோவில் முழுக்க முழுக்க சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். குறிப்பாக இந்த நிகழ்ச்சி தனித்தீவில் நடைபெற உள்ளது.

சுவாரஸ்யமான நிகழ்ச்சி

சுவாரஸ்யமான நிகழ்ச்சி

ஆள் அரவமற்ற அந்த தனித்தீவில் எந்த ஒரு வெளித் தொடர்புகளும் இல்லாமல் அவர்களுக்குள்ளாகவே சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டு கிடைப்பதை வைத்து வாழ வேண்டும். ஒவ்வொரு நாளும் போட்டிகள் கடுமையாக இருக்கும் . குறிப்பிட்ட நாட்கள் வரை போட்டியாளர்கள் எத்தகைய சவால்களை சந்திக்கிறார்கள், எந்த மாதிரி கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள் என மிக சுவாரஸ்யமாக இந்நிகழ்ச்சி உருவாகிறது.

24 மணி நேரமும்

24 மணி நேரமும்

மேலும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் முழுக்க முழுக்க அட்வென்சரஸ் என தெரியவந்துள்ளது . மனதளவிலும் உடலளவிலும் மிகக் கடுமையான போட்டிகளாகவே இதில் இடம்பெறுகிறது. மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முன்னணி நடிகர் கட்டாயமாக 24 மணி நேரமும் போட்டியாளர்களுடன் அங்கேயே தங்கி பயணிக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் தொகுத்து வழங்குவார்.

அதிகாரப்பூர்வ தகவல்கள்

அதிகாரப்பூர்வ தகவல்கள்

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினுக்கு யார் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என சமூக வலை தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. நாம் இதுவரை திரையில் கண்டு மகிழ்ந்த சினிமா நட்சத்திரங்கள் யார் யார் இதில் கலந்து கொள்வார்கள், யார் தொகுத்து வழங்குகிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் மிக விரைவிலேயே வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X