போலி செய்தி.. போட்டுத்தாக்கிய அர்ச்சனா அக்கா.. கொண்டாட்டத்தில் புள்ளிங்கோ.. பிகில் லாபம் தானாம்!

சென்னை: பிகில் படத்தால் 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அதன் தயாரிப்பார்கள் கூறினார்கள் என வெளியான செய்தி போலி என அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி சேனல் ஒன்றில், பிகில் படத்தின் வசூல் குறித்து வெளியான கட்டுரை தல தளபதி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சூட்டை கிளப்பியது.

காலை முதலே #BoxOfficeBaashaAJITH, #Bigil என்ற ஹாஷ்டேக்குகளை விஜய், அஜித் ரசிகர்கள் மாற்றி மாற்றி டிரெண்ட் செய்து சண்டை போட்டுக் கொண்டனர்.

40 கோடி

40 கோடி

தேனாண்டாள் தயாரிப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அட்லி இயக்கத்தில் உருவான அந்த படம் உண்மையிலேயே தயாரிப்பாளர்களுக்கு 40 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அஜித் ரசிகர்கள் தாக்கி வந்தனர்.

300 கோடி

300 கோடி

அதையடுத்தும், மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவான பிகில் படத்தின் வசூல் 300 கோடி என்று விஜய் ரசிகர்களும், எல்லாம் பீலா என அஜித் ரசிகர்களும் டிவிட்டர் சண்டை போட்டு வந்தனர். பின்னர், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பிகில் படத்தின் வசூல் 300 கோடிக்கும் மேல் என்ற தகவல் வெளியானதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

20 கோடி நஷ்டம்

20 கோடி நஷ்டம்

இந்நிலையில், பிரபல ஆங்கில செய்தி சேனல் ஒன்று, தளபதி விஜய்யின் 'பிளாக்பஸ்டர்' பிகில் 20 கோடி நஷ்டத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்ததாக அதன் தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதாக பரப்பிய செய்தி இன்று சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கியது. மீண்டும் விஜய் அஜித் ரசிகர்கள் பாக்ஸ் ஆஃபிஸ் சண்டை தொடங்கியது.

பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா

பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா

#BoxOfficeBaashaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரு படங்கள் தான் கடந்த ஆண்டு தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்த படங்கள் என்றும், பிகில் படத்தால் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் என்றும், அஜித் தான் பாக்ஸ் ஆஃபிஸ் பாட்ஷா என்றும் தல ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

ஆஜரான அக்கா

இந்நிலையில், இந்த விவகாரத்தை இப்படியே முற்ற விடக் கூடாது என்று எண்ணிய அர்ச்சனா கல்பாத்தி, அது ஒரு போலி செய்தி, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள் என அதிரடியாக டிவீட் போட்டு புள்ளிங்கோ இதயங்களை கடைசியாக குளிரவைத்துள்ளார். அவரது டிவீட்டுக்கு கீழே தளபதி ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X