காவல்துறையில் புரமோஷன் பெற்ற பிகில் பட நடிகர்.. குவியும் வாழ்த்து.. வைரல் போட்டோ!
சென்னை: பிகில் பட நடிகருக்கு காவல்துறையில் உயர் பதவி வழங்கப்பட்டிருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பிகில்'. இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் அலெக்ஸ் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் விஜயன்.

கால்பந்தாட்ட வீரர்
கேரளாவை சேர்ந்த விஜயன் ஏற்கனவே 'திமிறு', 'கொம்பன்' உள்ளிட்ட ஒருசில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். விஜயன் நடிகர் மட்டுமின்றி சிறந்த கால்பந்தாட்ட வீரரும் ஆவார்.

கேரள கால்பந்து அணி
கேரள காவல்துறையின் கால்பந்தாட்ட அணியில் பல ஆண்டுகளாக விளையாடியுள்ளார். மேலும் சர்வதேச கால்பந்து போட்டிகளிலும் கேரள கால்பந்து அணிக்காக பங்கேற்று வெற்றிக்கு வழி வகுத்துள்ளார்.

காவல்துறையில் பதவி உயர்வு
இந்த நிலையில் கேரள காவல்துறை நடிகர் விஜயனுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது. கேரள காவல் துறையினரிடம் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் என்ற பதவி உயர்வை தற்போது பெற்றுள்ளார்.

பாராட்டு வாழ்த்து
இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோக்களுடன் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











