ஏன் இப்படியெல்லாம் கிளப்பிவிடுறீங்க.. பிக்பாஸில் பெயர் அடிப்பட்ட பிகில் பட நடிகை கடுப்பு!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4ல் பங்கேற்க போவதாக தகவல் வெளியான நிலையில் அதனை நடிகை அம்ரிதா அதிரடியாக மறுத்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும் என நிகழ்ச்சிக் குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் குரலுடன்
இதன் தொடக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக் குறித்த இரண்டு டீசர்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ஒரு டீசர் வெளியான நிலையில் தற்போது மேலும் ஒரு டீசர் வெளியாகியுள்ளது. கொரோனா விழிப்புணர்வுடன் ரசிக்கும் வகையில் பிக்பாஸ் குரலுடன் அசத்தலாக உள்ளது இந்த டீசர்.

போட்டியாளர்கள் லிஸ்ட்
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது. அதன்படி, நடிகைகள் சுனைனா, கிரண், அதுல்யா ரவி, வித்யுலேகா ராமன், அம்ரிதா அய்யர் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

சுனைனா மறுப்பு
அதேபோல் நடிகை ஷில்பா மஞ்சுநாத், ரம்யா பாண்டியன், டிக்டாக் இலக்கியா, புகழ், அமுதவாணன், ஷிவாங்கி உள்ளிட்டோரின் பெயர்களும் அடிப்பட்டது. ஆனால் நடிகை சுனைனா, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என மறுத்தார்.

அம்ரிதா
இதேபோல் நடிகை ரம்யா பாண்டியனும் மறுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிகில் படத்தில் தென்றல் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை அம்ரிதாவும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏன் இப்படி கிளப்பிவிடுறீங்க?
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில் ஏன் முறையே இல்லாமல் மக்கள் என்னை பிக்பாஸ் லிஸ்டில் சேர்த்து வருகிறார்கள் என கேட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அப்போ பிக்பாஸ்ல நீங்க இல்லையா? என ஏக்கத்துடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











