அவ்ளோ ஆர்வம் அதுல.. ஹீரோயின் மட்டுமில்ல.. அந்த ரோலையும் பிகில் தென்றலே பண்ண போறாங்களாம்!

சென்னை: ஹாரர் படமான லிஃப்டில் ஹீரோயினாக மட்டுமின்றி இன்னொரு துறையிலும் நடிகை அம்ரிதா அய்யர் ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.

Recommended Video

வீட்டை கழுவி தொடைக்கும் Kavin | Losliya turns funny in Quarantine

விஜய் ஜேசுதாஸ் உடன் இணைந்து படைவீரன் மற்றும் விஜய் ஆண்டனியின் காளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அம்ரிதா அய்யர்.

ஆனால், அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் கவின்

பிக்பாஸ் கவின்

பிகில் படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தைத் தொடர்ந்து நடிகை அம்ரிதா அய்யர், பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக ஹாரர் திரில்லர் படமான லிஃப்டில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி வைரலாகின. நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்திற்கு பிறகு கவினுக்கு கிடைத்துள்ள மற்றொரு வாய்ப்பு இது.

லாஸ்லியா

லாஸ்லியா

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் காதலர்களாக அறிமுகமான கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் அடுத்தடுத்து சினிமாவில் பிசியாகி உள்ளனர். ஆனால், இருவரும் இணைந்து நடிக்காமல், தனித்தனியே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் மற்றும் ஆரி நடிப்பில் உருவாகி வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

அம்ரிதா அய்யர்

அம்ரிதா அய்யர்

பெங்களூரில் பிறந்து வந்த அம்ரிதா அய்யர் மலையாளத்தில் வெளியான பத்மவியூகம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி உள்ளிட்ட படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த அம்ரிதா அய்யருக்கு படைவீரன் படத்தில் நாயகி ரோல் கிடைத்தது. மல்டி ஹீரோயின் சப்ஜெக்டாக வெளியான காளி படத்திலும் நடித்திருந்தார்.

பிகில் தென்றல்

பிகில் தென்றல்

ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டிய பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றல் கதாபாத்திரத்தில் அம்ரிதா அய்யர் நடித்திருந்தார். தனது சிறப்பான நடிப்பால், பிகில் தென்றலாகவே தற்போது அறியப்படுகிறார்.

கவினுடன்

கவினுடன்

இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் பிக்பாஸ் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் நடிப்பில் பேய் படமாக லிஃப்ட் படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் கவின் மற்றும் அம்ரிதா அய்யர் ரத்தக் கறையுடன் பயத்துடன் உட்கார்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு மிரட்டியது. லாக்டவுன் இல்லையென்றால் இந்நேரம் லிஃப்ட் ரிலீசுக்கு ரெடியாகி இருக்கும்.

காஸ்ட்யூம் டிசைனர்

காஸ்ட்யூம் டிசைனர்

லிஃப்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை அம்ரிதா அய்யர், அந்த படத்திற்கு தற்போது காஸ்ட்யூம் டிசைனர் வேலையையும் சேர்த்து பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமில் அம்ரிதா அய்யர் நடிக்க உள்ளதாகவும், அதனால் தான் அவரையே காஸ்ட்யூம் டிசைனராக படக்குழு போட்டு இருக்கிறது என்பதையும் ரிவீல் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: lift kavin கவின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X