பிகில் பட நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?..வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை : பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி இன்று பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் பெரிய சாதனையை படைத்தது.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

விஜய்யின் பிகில்

விஜய்யின் பிகில்

தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் மற்றும் அட்லி இணைந்து பணியாற்றி இருந்தார்கள். பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்ட இந்த படத்தில், பல்வேறு காரணங்களால் முடங்கியிருக்கும் பெண்களை தங்கள் கனவுகளைத் தொடர, வாழ அழைக்கும் காட்சிகளும் 'சிங்கப் பெண்ணே' பாடலும் அட்டகாசமாக இருந்தது.

காயத்ரி ரெட்டி

காயத்ரி ரெட்டி

இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இருந்தவர் தான் காயத்ரி ரெட்டி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, காயத்திரி ரெட்டி பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 அழகிகளின் இடத்தை பிடித்து இருந்தார்.

சர்வைவர் ரியாலிட்டி ஷோவில்

சர்வைவர் ரியாலிட்டி ஷோவில்

காயத்ரி ரெட்டி நடித்த முதல் திரைப்படமே விஜயின் படம் என்பதால் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் ரியாலிட்டி ஷோவிலும் காயத்ரி ரெட்டி பங்கு பெற்று சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளமும் கணிசமாக அதிகரித்து.

மை ஹஸ்பண்ட்

மை ஹஸ்பண்ட்

காயத்ரி ரெட்டிக்கு கடந்த மே மாதம் இவருக்கு வீட்டில் எளிமையாக முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று அவருக்கு பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண போட்டோவை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மை ஹஸ்பண்ட் குட்டி இதயத்துடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X