அவரு கோச்சிக்க போறாரு.. கைதி இயக்குநரை புகழ்ந்த தள்ளிய பிகில் நடிகை!

பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்துள்ள நடிகை இந்துஜா, கைதி படம் மிகவும் அற்புதமான ஒன்று என்றும், சினிமா துறையில் லோகேஷ் கனகராஜ் இருப்பது பெருமையான விஷயம் என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சென்னை: மேயாத மான், மெர்க்குரி, மகாமுனி படங்களில் நடித்த நடிகை இந்துஜா, விஜய்யின் பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் கைதி படத்தை சமீபத்தில் பார்த்த நடிகை இந்துஜா தற்போது, ட்விட்டரில் அந்த படத்தையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கலக்கல்

கலக்கல்

மேயாதமான் படத்தில் வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜா, தனது வித்தியாசமான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மெர்க்குரி படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான ஆர்யாவின் மகாமுனி படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படத்திலும், முக்கியமான ரோலில் இந்துஜா கலக்கி இருந்தார்.

முக்கியத்துவமில்லை

முக்கியத்துவமில்லை

பிகில் திரைப்படம் கடந்த 8 நாட்களில் உலகமெங்கும் 220 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டிய பிகில், சென்னையில் மட்டும் 10 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. பிகில் படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த இந்துஜாவுக்கு படத்தில் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா அய்யர், வர்ஷா பொல்லம்மா மற்றும் பாண்டியம்மாவாக நடித்த இந்திரஜாவுக்கு கொடுத்த அளவுக்கு இந்துஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது இந்துஜாவின் ரசிகர்களின் வருத்தம்.

கிண்டல்

கிண்டல்

தீபாவளியை முன்னிட்டு சன் டிவியில் வெளியான பிகில் திருவிழா ஸ்பெஷல் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட இயக்குநர் அட்லியிடம், இந்துஜா எப்படி கால்பந்தாட்டம் ஆடுவார் என தொகுப்பாளர் கேட்க, இந்துஜா கால்பந்தாட்டம் ஆடி தான் பார்த்ததே இல்லை என அட்லி கிண்டல் அடித்தார்.

பாராட்டு

இந்நிலையில், சமீபத்தில், கைதி திரைப்படத்தை பார்த்த நடிகை இந்துஜா, சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த படம் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். கைதி மிகவும் தரமான படம் என்றும், திரைத்துறையில் லோகேஷ் கனகராஜ் இருப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், படத்தில் நடித்த ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரம் அறிந்து நடித்து அசத்தியுள்ளனர் என்றும் பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X