இடுப்புல சேலையை தூக்கி சொருகி.. அப்படியொரு போஸ் கொடுத்த இந்துஜா.. சும்மா எகிறுது லைக்ஸ்!

சென்னை: இடுப்புல சேலையை தூக்கி சொருகி முகத்தை ஒரு பக்கமா சாய்த்து போஸ் கொடுத்துள்ள இந்துஜா ரவிச்சந்திரனின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏகப்பட்ட நடிகைகள் தொடர்ந்து சேலை கட்டி போட்டோக்களாக போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேயாத மான், மகாமுனி, பிகில், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இந்துஜாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தீபாவளி போல

தீபாவளி போல

தீபாவளி போல தமிழ்ப் புத்தாண்டு பண்டிகையையும் தமிழர்கள் புத்தாண்டு அணிந்து வீட்டில் தீப ஒளிகளை ஏற்றி மங்களகரமாக கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இந்த போட்டோக்களை பதிவிட்டு தனது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நானிலம் சிறக்க

நானிலம் சிறக்க

மேலும், அட்டகாசமான போட்டோக்களுடன் கேப்ஷனாக அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.. நல்லதே நடக்க... நானிலம் சிறக்க... மகிழ்ச்சி பெறுக... மனித நேயம் சிறக்க... வரவேற்கிறது புத்தாண்டு... வாழ்வோம் பல்லாண்டு! என்றும் செம ரைமிங்காக கவிதை ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இடுப்புல தூக்கி சொருகி

இடுப்புல தூக்கி சொருகி

சேலையை இடுப்புல தூக்கி சொருகி ஏதோ அவசர அவசரமாக வேலை பார்க்க செல்லும் குடும்ப தலைவி போல அட்டகாசமான போஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் இந்துஜா. இவர் பதிவிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வேற லெவலில் டிரெண்டாகி வருகின்றன.

லைக் செய்த செல்வராகவன் மனைவி

லைக் செய்த செல்வராகவன் மனைவி

பாரம்பரிய உடை அணிந்து மங்களகரமாக நடிகை இந்துஜா இந்த போட்டோக்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி லைக் செய்துள்ளார். மேலும், ஏகப்பட்ட பிரபலங்களும் ரசிகர்களும் லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் கொட்டி வருகின்றனர்.

சும்மா ஜொலிக்கிறாங்க

சும்மா ஜொலிக்கிறாங்க

அழகான சீர் வரிசை பற்களை காட்டி சிரிப்பால் ரசிகர்களை மயக்கி சும்மா ஜொலிக்கிறாங்க இந்துஜா ரவிச்சந்திரன். நயன்தாராவின் நெற்றிக்கண் மற்றும் விஜய் ஆண்டனி உடன் காக்கி என இரு படங்கள் இவரது நடிப்பில் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X