’பிகில்’ மாரியம்மாவுக்கு திடீரென நடந்த திருமணம்.. பாண்டியம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: பிகில், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
தனது சோஷியல் மீடியா பக்கங்களில் திருமண புகைப்படங்களை வெளியிட்டு இவர் தான் என் கணவர் என அறிமுகம் செய்துள்ளார்.
அந்த போஸ்ட்டை பார்த்து பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்த இந்திரஜா சங்கர் போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காதலனை கரம்பிடித்த காயத்ரி ரெட்டி
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான காயத்ரி ரெட்டி திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டேன் என திருமண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். எளிமையான முறையில் இந்து முறைப்படி காயத்ரி ரெட்டியின் திருமணம் நடைபெற்றுள்ளது.

மே மாதம் நிச்சயமானது
மாடல் அழகியும் நடிகையுமான காயத்ரி ரெட்டிக்கும் அவரது காதலருக்கும் கடந்த ஏப்ரல் 29ம் தேதி எளிமையான முறையில் நிச்சயம் நடைபெற்றது. அதன் பிறகு திருமணத்தை சினிமா பிரபலங்களுக்கு எல்லாம் சொல்லி பிரம்மாண்டமாக நடத்துவார் என அவரது ரசிகர்கள் நினைத்த நிலையில், எந்தவொரு சத்தமும் காட்டாமல் திடீரென எளிமையான முறையில் திருமணத்தை செய்து கொண்டார் காயத்ரி ரெட்டி.

பிகில் மாரியம்மா
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த பிகில் படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரெட்டி. பிகில் படத்தில் என்ன மாரியம்மா என விஜய் கலாய்த்து பேசும் வசனமெல்லாம் வேற லெவலில் டிரெண்டானது. பாண்டியம்மாவாக இந்திரஜா நடித்திருப்பார். மாரியம்மாவாக அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்திருப்பார்.

கவின் படத்தில்
பிகில் படத்தில் தென்றலாக நடித்த அம்ரிதா அய்யர் கவினுக்கு ஜோடியாக நடித்த பேய் படமான லிப்ட் படத்தில் அந்த பேயாகவே நடித்திருப்பார் காயத்ரி ரெட்டி. கேமியோ கதாபாத்திரமாக ஃபிளாஷ்பேக்கில் இவரது போர்ஷன் வரும், அதன் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், காதலரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.

சர்வைவர் தமிழ்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காயத்ரி ரெட்டி பல சவால்களை சந்தித்து மூன்றாம் உலகத்தில் பல நாட்கள் தாக்குப் பிடித்து பின்னர் வெளியேறினார். தான் எந்தளவுக்கு ஒரு போல்டான பெண் என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் காயத்ரி ரெட்டி.

பாண்டியம்மா வாழ்த்து
காயத்ரி ரெட்டி திருமணம் செய்து கொண்டு தனது கணவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்த ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் "Congratulations happy married life akka" என வாழ்த்தி உள்ளார். சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் இந்திரஜா சங்கர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











