Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா!
சென்னை: பிகில் திரைப்படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு புலிப் பெண்ணாக மாறி பதிவிட்டு இருக்கும் உணர்வுப் பூர்வமான போஸ்ட் வைரலாகி வருகிறது.
Recommended Video
மாஷ் அப், டிக் டாக் வீடியோக்கள் போட்டு கலக்கி வந்த இந்திரஜா சங்கருக்கு, தளபதி விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போஸ்ட்களை போட்டு வரும் இந்திரஜா சங்கர், குடியரசு தினத்தை முன்னிட்டு போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார்.

72வது குடியரசு தின விழா
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில், மக்களுக்கான அரசையும் மக்கள் சாசனத்தையும் உருவாக்கி குடியரசு தினத்தை 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி 40 கோடி இந்தியர்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய நாள் இன்று. 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் பதிவிட்டுள்ள நாட்டுப் பற்று பதிவுகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

பாயும் புலிகளும் நாங்களே
முகத்தில் புலி வேஷம் போட்டு உடம்பில் தேசியக் கொடி ஆடை, தலையில் தேசியக் கொடி டர்பன் மற்றும் பேக்ரவுண்டில் மயில் இறகு என குடியரசு தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறார் நடிகை இந்திரஜா சங்கர். "மழை அறிந்து ஆடும் அழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே.. அழகு மயிலாக வாழவும், பாயும் புலியாக மாறவும் தயாராவோம்... வாழ்க வையகம்!" என உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளை போட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்திரஜா.

வறுமையை துரத்தி
வறுமையை துரத்தி வளமையைகாண்போம்.. வேற்றுமையில்லா ஒற்றுமையை காண்போம்.. பசியில்லா வயிறைக் காண்போம் தீபகற்பமாம் இந்தியா மாற சீறும் சிறுத்தையென மாறுவோம் நாம்.. .வந்தேமாதரம்!" என கர்ஜிக்கும் தோற்றத்துடன் இன்னொரு போட்டோஷூட் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.

மூவர்ணக் கொடி மகிமை
மூவர்ணக் கொடியில் காவி காட்டுவது - தியாகத்தை, வெண்மை வெளிக்கொணர்வது - தூய்மையை, பச்சை விவரிப்பது - விவசாய பசுமையை... நிறங்களில் வேற்றுமையிருந்தாலும் மனங்களில் ஒற்றுமையுடன் வாழ்வோம் நாம்.. ஜெய்ஹிந்த்!" என இன்னொரு போஸ்ட்டையும் அருமையான கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.

தொப்புள்கொடி போல
தாயின் தொப்புள்க்கொடி எவ்வளவு வலிமையானதோ அவ்வளவு வலிமை மிக்கது நம் தேசியக்கொடியும். அவ்வலிமையை மேம்படுத்த ஒன்றுபடுவோம்.அனைவருக்கும் குடியரசுதின வாழ்த்துக்கள்! ஜெய்ஹிந்த்! என அசோக சின்னத்தில் இருக்கும் மூன்று தலை கொண்ட புலியாக காட்சி தந்து நாட்டுப் பற்றை பறைசாட்டியுள்ள பிகில் பாண்டியம்மா நடிகை இந்திரஜா சங்கரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!