Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பிறந்தநாளன்று சர்ப்ரைஸ் புரொபஸல்.. சந்தோஷத்தில் ’பிகில்’ நடிகை.. காதலருடன் விரைவில் திருமணம்!
சென்னை: 'பிகில்' நடிகை ரெபா மோனிகா நேற்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாள் அதுவுமா அவரை சர்ப்ரைஸாக புரொபஸ் செய்த அவரது காதலர் மோதிரம் மாற்றி நிச்சயமும் செய்துவிட்டார்.
என்ன திடீர்னு எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுறாங்க.. விவசாயிகள் போராட்டம்.. பிரபலங்களை சாடும் நடிகர்!
என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என அவர் கேட்டதற்கு உடனே நடிகை ரெபா மோனிகாவும் ஓகே சொல்ல இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிகிறது

சிங்கப்பெண்ணே
தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார் நடிகை ரெபா மோனிகா ஜான். சிங்கப்பெண்ணே பாடலுக்கு முன்னதாக நடிகர் விஜய் அவரை வெளியே கொண்டு வந்து ஊக்கப்படுத்தும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

மலையாள நடிகை
2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜாகோபின்டே சுவர்கராஜ்ஜியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கடந்த 2018ம் ஆண்டு நடிகர் ஜெய்யுடன் ஜருகண்டி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ஃபாரன்ஸிக் படத்திலும் இவர் தான் ஹீரோயின்.

27 வயசு
1994ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பெங்களூருவில் பிறந்த நடிகை ரெபா மோனிகா ஜான் நேற்று தனது 27வது பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடினார். நடிகை அனு இம்மானுவேலின் உறவினரான இவர், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சர்ப்ரைஸ் புரபோஸல்
பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்களுக்கான மாதம் தான். அதிலும் பிப்ரவரி மாதத்தில் பிறந்த நடிகை ரெபா மோனிகாவுக்கு அவரது பிறந்தநாளன்றே நீண்ட நாட்களாக அவருடன் நட்பாக பழகி வந்த ஜோமோன் என்பவர் சர்ப்ரைஸாக செய்த புரபோஸல் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உடனே ஓகே
தன்னுடன் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்த ஜோமோன் துபாயில் ஸ்பெஷலாக பர்த்டே டின்னரை ஏற்பாடு செய்து தனது காதலை சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா என மோதிரத்தை காட்ட ரெபாவும் உடனே ஓகே சொல்லிவிட்டார். இருவரும் காதல் பொங்க இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

சீக்கிரமே திருமணம்
கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 6 மாத காலமாக ரெபாவை பிரிந்து இருக்கும் போது தான் ஜோமோனுக்கு தான் அவரை காதலித்து வருவது புரிந்துள்ளதாம். ரெபாவுடன் நிச்சயம் செய்துள்ள நிலையில், சீக்கிரமே இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.