அட்லீ ப்ரோ.. இப்படி பண்ணி வச்சுருக்கீங்க.. பிகிலை பார்த்து ஷாக்கான அஜித் பேன்ஸ்.. என்ன சொல்றாங்க?
நடிகர் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் பிகில் படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்களும் ரிவ்யூ எழுதி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் பிகில் படத்திற்கு தற்போது அஜித் ரசிகர்களும் ரிவ்யூ எழுதி வருகிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி ட்ரீட்டாக பிகில் படம் வெளியாகி உள்ளது. சென்னையை மையமாக வைத்து, ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக பிகில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் விஜயின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. படம் காலை முதல் காட்சியில் இருந்தே நல்ல ரிவ்யூவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள்
எப்போது விஜய் படம் வந்தாலும் அதை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பது வழக்கம். ஆனால் இந்த படத்தை அஜித் ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். படம் எங்களுக்கும் திருப்தியாக இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
அஜித் பேன்
நான் அஜித் பேன், ஆனாலும் பிகில் படம் வெறித்தனம். பிஜிஎம் ஏ. ஆர் ரகுமான் வேறலெவல்.
என்ன விஷயம்
வியப்பான ஒரு விஷயம் என்னனா அஜித், சூர்யா ரசிகர்கள் நிறைய பேர் படம் நல்லா இருக்குனு பாசிட்டிவ் ரெவியூ தராங்க 😍😍நல்ல உள்ளம் 😇👌அட்லீ னு ஒரு மனுஷன் எல்லாரையும் திருப்திப்படுத்துறார்யா ❤🙏 இந்த தீபாவளி நம்முளது தான், என்று இவர் டிவிட் செய்துள்ளார்.
செம
நானும் ஒரு அஜித் ரசிகைதான்..ஆனா பிகில் படம் நேர்கொண்ட பார்வையை விட பலமடங்கு நல்லாருக்கு👌நல்ல கருத்துள்ள படம்
உங்க தீபாவளி
ஒரு அஜித் பேனா சொல்றேன் படம் வேற லெவல்👌 #Bigil இந்த தீபாவளி உங்களோடது


Click it and Unblock the Notifications











