போடுறா வெடிய.. 300 மில்லியன் வியூஸ்.. யூடியூபை தெறிக்கவிட்ட பிகில்.. ஏ.ஆர். ரஹ்மானின் வெறித்தனம்!
சென்னை: இன்னைக்கு ட்விட்டரை தெறிக்கவிட விஜய் ரசிகர்களுக்கு இரண்டு காரணம் கிடைத்திருக்கிறது.
Recommended Video
ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கோ மசக்கலி 2.0 பிரச்சனையில் இருந்து செம ரிலீஃப்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் ஆல்பம் யூடியூபில் 400 மில்லியன் வியூஸை கடந்ததை கொண்டாடிய விஜய் ரசிகர்கள், பிகில் ஆல்பம் 300 மில்லியன் வியூஸை கடந்ததையும் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
போடுறா வெடிய
தளபதி 63 படமாக பிகில் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே போடுறா வெடிய என்ற வார்த்தையை அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பிகில் படக்குழுவினர் பயன்படுத்தி வந்தனர். யூடியூபில் ஒட்டுமொத்தமாக பிகில் படத்தின் ஆல்பம் 300 மில்லியன் எனும் இமாலய சாதனையை படைத்துள்ளதை தளபதி ரசிகர்கள் #bigilalbumhits300mviews என்ற ஹாஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மான் வெறித்தனம்
மெர்சல், பிகில் மற்றும் சர்கார் என தொடர்ந்து தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் ஆல்பங்களை கொடுத்து தெறிக்கவிட்டு வரும் ஏ.ஆர். ரஹ்மானே இந்த ஒட்டுமொத்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். மாஸ், கிளாஸ் என ஒவ்வொரு பாடலிலும் பலவிதமான புதிய முயற்சிகளையும் ரஹ்மான் தளபதி விஜய்க்காக மெனக்கட்டு செய்திருப்பார்.
300 மில்லியன் கணக்கு
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிகில் ஆல்பம் வெளியானது. இந்த படத்தில் தளபதி குரலில் வெளியான வெறித்தனம் பாடல் 132 மில்லியன் வியூஸும், சிங்கப்பெண்ணே 93 மில்லியனையும், உனக்காக பாடல் 38.8 மில்லியனையும், பிகிலு பிகிலு பிகிலுமா 40.8 மில்லியனையும், மாதரே 3.75 மில்லியனையும், இதற்குத்தான் 2.28 மில்லியனையும், காலமே பாடல் 3.7 மில்லியன் மற்றும் ஒட்டுமொத்த ஜூக் பாக்ஸ் 3.15 என மொத்தமாக 317 மில்லியன் வியூஸை பிகில் ஆல்பம் பெற்றுள்ளது.
டபுள் ட்ரீட்
மாஸ்டர் படம் ரிலீசாகாத வேதனையில் FDFS கொண்டாட முடியவில்லையே என கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக மெர்சல் பட ஆல்பம் 400 மில்லியன் வியூஸ் அள்ளியதும், பிகில் ஆல்பம் 300 மில்லியன் வியூஸ் அள்ளியதும் இன்று ஒரே நாளில் டிரெண்டாகி தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
வெற்றி கூட்டணி
அட்லி, விஜய், ஏ.ஆர். ரஹ்மான் காம்போ எப்போதுமே வெற்றிக் கூட்டணி தான். கடந்த அக்டோபர் மாதம் வெளியான பிகில் படத்தின் பாடல்கள் யூடியூபில் 6 மாத காலத்திலேயே இப்படியொரு சாதனை படைத்ததை விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். மீண்டும் இந்த வெற்றிக் கூட்டணி இணைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
300 கோடி வசூல்
மைக்கேல், பிகில், ராயப்பன் என நடிகர் விஜய் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்த பிகில் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றுத் தந்தது. அதிகபட்சமாக 300 கோடி ரூபாயை பிகில் வசூலித்த நிலையில், 300 மில்லியன் ஆல்பம் வியூஸ் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











