10 நாட்கள் முடிவில் பிகில், கைதி படங்கள் சென்னையில் வசூலித்த தொகை இவ்வளவுதான்!
சென்னை: பத்து நாட்கள் முடிவில் பிகில் மற்றம் கைதி படங்கள் சென்னையில் மட்டும் வசூலித்த தொகை எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸாக தமிழகத்தில் பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் வெளியானது. விஜய், அட்லி, ஏஆர் ரஹ்மான், நயன்தாரா என மெகா கூட்டணியில் வெளியான பிகில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஆனால் பிகில் திரைப்படம் தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்த பிகில் படம், இரண்டு, மூன்றாம் நாட்களிலேயே இறங்கு முகத்தை சந்தித்தது.

அதிகரிப்பு
ஆனால் முதல் நாளில் குறைவான வசூலை பார்த்த கைதி படம் அடுத்தடுத்த நாட்களில் ஏறுமுகத்தை தொடங்கியது. இதனால் கைதி படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டன.

நல்ல வசூல்
இந்நிலையில் இரு படங்கள் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இரு படங்களும் எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களுமே நல்ல வசூலை பார்த்துள்ளது.

கைதி ரூ.2.79 கோடி
சென்னையில் மட்டும் பிகில் படம் கடந்த 10 நாட்களில் 10.07 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கைதி படம் 2.79 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

மகிழ்ச்சி
கைதி படத்தின் தியேட்டடர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதால் கைதி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. கைதி படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











