வாவ்.. வாயை பிளக்கும் பாலிவுட்.. இந்திய அளவில் பிகில், கைதி செய்த சாதனையை பாருங்க!

Recommended Video

Kaithi Box Office:குவியும் கூட்டம், அள்ளும் வசூல்

சென்னை: தமிழில் கடந்த வாரம் வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் சாதனை படைத்துள்ளன.

இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழில் இரண்டு படங்கள் வெளியாயின. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் படமும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கைதி படமும் ரிலீஸானது.

இரண்டு படங்களும் கடந்த வெள்ளிக் கிழமை வெளியானது. விஜய் மாஸ் ஹீரோ என்பதால் பிகில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

ஆனால் பிகில் படம் எதிர்பார்ப்பை அந்தளவுக்கு பூர்த்தி செய்யவில்லை என தெரிகிறது. கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவான பிகில் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

காட்சிகள் அதிகரிப்பு

காட்சிகள் அதிகரிப்பு

ஆனால் ஹீரோயின் இல்லாமல், ஒரு பாட்டுக்கூட இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கைதி படம் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

சாதனை

சாதனை

இந்நிலையில் தமிழில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் இந்திய அளவில் சாதனை படைத்திருக்கிறது. அதாவது, பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு படங்களும் முதல் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

வசூல் குவிப்பு

வசூல் குவிப்பு

மற்ற மொழிகளிலும் கடந்த வெள்ளிக்கிழமை பல படங்கள் ரிலீசாகின. அப்படி வெளியான படங்களில் இந்திய அளவில் வசூலை குவித்த 5 படங்கள் லிஸ்டில் பிகில் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

டாப் 5 லிஸ்ட்

டாப் 5 லிஸ்ட்

கைதி திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ராஜ்குமார் ராவ் - மவுனி ராய் நடிப்பில் ரிலீஸான மேட் இன் சீனா படம் 4 ஆம் இடத்தையும் டாப்ஸி மற்றும பூமி பட்னேகர் நடிப்பில் வெளியான சாந்த் கி ஆக் திரைப்படம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X