சக்கை போடு போடும் பிகில்.. கைதி.. சரமாரி வசூல்.. பிகே பீட்ஸ் 5

Recommended Video

Bigil Vs Kaithi Box Office Collection

சென்னை: பிகில் படமும் சரி, கைதி படமும் சரி வெளுத்துக் கட்டுகின்றனவாம் வசூலில். திரையுலகமே ஹேப்பியாக உள்ளதாம்.

விஜய் நடித்த படம் பிகில். கார்த்தி நடித்த படம் கைதி. இரண்டுமே தீபாவளிக்கு வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளன. ரசிகர்களைத் தாண்டி மக்களையும் இவை கவர்ந்துள்ளதால் வசூலுக்கு குறைவில்லையாம். ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை தழுவித்தான் கைதி படக் கதை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

bigil and kaithi rock in box office

கார்த்தியை விடுங்க.. அடுத்து அதிரடி காட்ட வருகிறார் அண்ணன் சூர்யா. சூரரைப் போற்று, சூர்யா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளதாம். படம் அனேகமாக பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதியைப் பார்த்தாச்சு, தம்பியைப் பார்த்தாச்சு, அண்ணனையும் பார்த்தாச்சு.. தாத்தாவை விட்ரலாமா.. அவரையும் பார்ப்போம்.. அட இந்தியன் 2 தாத்தா சேனாதிபதியைப் பத்தித்தான் சொல்றோம். பிக் பாஸை முடித்த கையோடு இந்தியன் 2 பக்கம் வந்து விட்டார் கமல். சமீபத்தில் சேனாபதிபதி கெட்டப் படங்கள் லீக் ஆகி எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளன.

இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் மிஷ்கின். அவர் எடுக்கப் போகும் அடுத்த படம் துப்பறிவாளன் 2. முதல் படம் நன்றாகப் பேசப்பட்டது. குறிப்பாக விஷாலின் நடிப்பு. இப்போது 2வது பாகமும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கெளதம் மேனன் மீண்டும் பிசியாகி விட்டார். விஜய்க்காக உருவாக்கிய யோஹன் அத்தியாயம் 2 படத்தை கையில் எடுத்துள்ளார். விஜய் வேடத்தில் வருண் நடிக்கவுள்ளார். படம் அப்போதே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது. இப்போது மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X