பிகில் அனிதா இப்போது டோவினோ தாமஸுடன் கைரேகை பார்த்து கொண்டுஇருக்கிறார்

சென்னை: தமிழில் பிகில் படத்தில் வந்த அனிதா கதாபாத்திரம் பலரையும் கண்கலங்க வைத்தது அதே நேரத்தில் கை தட்டல்களையும் பெற்றது .இந்த கதாபாத்திரத்தில் 'ரெபா மோனிகா ஜான் 'நடித்திருந்தார் . இந்த படத்திற்கு முன் ஜருகண்டி, ஜாகோபிண்டே ஜீவர்கராஜியம் ,மைக்கேல் ஆகிய படங்களில் நடித்திருப்பார் . இவர் அடுத்தாக தமிழில் ஹரீஸ் கல்யானுடன் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் நடித்து வருகிறார் .

இதற்கடுத்து மலையாளத்தில் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஃபோரன்சீக்' படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட ரெபா மோனிகா ஜான், மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன், இந்த படத்தில் சிக்கா தாமோதரர் என்ற கதாபாத்திரத்தில் தான் நடிக்க போவதையும் குறிப்பிட்டு இருந்தார் மேலும் டொவினோ தாமஸ் கூட நடிப்பது மிக்க மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார் .

bigil anitha entering into malayalam cinema

டொவினோ தாமஸ் மலையாளத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்.இவர் தமிழில் 'மாரி-2' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் . இதற்கு முன் தனுஷ் மலையாளத்தில் தயாரித்த 'தரங்கம்' படத்திலும் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் .

டொவினோ தாமஸை மலையாள சினிமாவின் விஜய் சேதுபதி என்றே எடுத்து கொள்ளலாம் ,பல கதாபாத்திரங்களில் நடிக்கிறார் ,ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மெனகட்டு நல்ல நடிப்பை கொடுக்கிறார் மேலும் ஹீரோ வில்லன் என்று எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து விடுகிறார் .

bigil anitha entering into malayalam cinema

சினிமாவில் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த டொவினோ 'பிரபுவின்டே மக்கள்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் ,அதற்கு பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய டொவினோ சரசரவென பல படங்களில் நடித்தார்.மோகன்லால் ,துல்கர் சல்மான் படங்களில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .அதற்கு பிறகு இவர் கப்பி படத்தில் நடித்திருந்தார் ,அந்த படம் இவருக்கு பல விருதுகளை பெற்று தந்தது அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார் டொவினோ தாமஸ் .
டொவினோ தாமஸ் அடுத்தாக கிலோமீட்டர்ஸ் அண்ட் கீலோம்ட்டரஸ் ,மின்னல் முரளி ,பூமி,ஆர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

bigil anitha entering into malayalam cinema

ஃபோரன்சீக் படத்தை இயக்கி வருகிறார்கள் அகில் பவுல் மற்றும் அனாஷ் கான் .
ஜுவிஸ் புரடக்ஸ்சன் படத்தை தயாரித்து வருகின்றனர் .படக்கதை அறிவியல் பூர்வமாக பல நுணுக்கங்களை கொண்டும் உருவாக்கபட்டு வருகிறது என்பது படத்தின் முதல் பார்வையின் மூலம் நமக்கே தெரிகிறது. படத்தின் படப்பிடிப்பு இப்போதே துவங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X