twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்க வைக்கணும்”.. எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

    சுபஸ்ரீ விவகாரத்தில் ஒரு ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் ஆக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

    |

    Recommended Video

    Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

    சென்னை: மிகவும் எதிர்பார்த்தது போலவே சுபஸ்ரீ விவகாரம் தொடர்பாக தனது கருத்தை நறுக்கென பதிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

    அட்லீ இயக்குத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் பிகில். இந்த படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிகில் இசை வெளியீட்டு விழா சென்னையை அடுத்த நடுவீரப்பிட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

    மாஸ் சம்பவம் காத்திருக்கு.. பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்மாஸ் சம்பவம் காத்திருக்கு.. பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்

    மேடையேறிய விஜய்

    மேடையேறிய விஜய்

    விழா ஆரம்பித்து சுமார் 4 மணி நேரம் கழித்து தான் மேடை ஏறினார் விஜய். ரசிகர்களுக்காக வெறித்தனம் பாடலை பாடி அசத்தினார். பெரும் ஆரவாரத்துக்கு இடையே தனது உரையை அவர் நிகழ்த்தினார்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    அப்போது பேனர் விழுந்ததால் மரணமடைந்த சுபஸ்ரீ குறித்து தனது வருத்ததை அவர் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரத்தில் லாரி டிரைவர், பேனர் அச்சடித்தவர் மீதெல்லாம் பழிப் போடப்பட்டது குறித்து அவர் ஆதங்கப்பட்டார்.

    வாழ்க்கை ஒரு ஃபுட்பால்

    வாழ்க்கை ஒரு ஃபுட்பால்

    விழாவில் அவர் பேசியதாவது, " நம்ம வாழ்க்கையும் ஒரு ஃபுட்பால் விளையாட்டு மாதிரி தான். நாமெல்லாம் கோல் அடிக்க ஆசைப்படுவோம். ஆனா, அதைத் தடுக்க ஒருகூட்டம் வரும். நம்மகூட இருக்குறவனே சேம்சைட் கோல் போட்ருவான்.

    வெறித்தனம் பாடல்

    வெறித்தனம் பாடல்

    முதலில் வெறித்தனம் பாடலை பாடி ரஹ்மான் சாருக்கு ஒரு சாம்பிள் அனுப்பிவிட்டேன். ஆனால் அவரிடம் இருந்து உடனே பதில் எதுவும் வரவில்லை. அவர் மும்பைக்கு கிளம்பி போயிவிட்டார். சரி நான் பாட வேண்டாம்னு அவர் சொல்லிவிட்டார் என நினைத்தேன். ஆனால் அட்லி கால் செய்து பண்ணி சொன்ன பிறகு தான் ரஹ்மான் சார் ரெக்கார்டிங் கூப்பிட்டது எனக்கு தெரியவந்தது.

    நமக்கென்று ஒரு அடையாளம்

    நமக்கென்று ஒரு அடையாளம்

    எப்போதும் நமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும். யாருடைய அடையாளத்தையும் நாம எடுத்துக்கக்கூடாது. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை கொண்டுவாங்க. புடிச்சா எடுத்துக்கோங்க; இல்லைனா விட்டுருங்க. அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டுல அரசியல் பாக்காதீங்க.

    பழிபோடுகிறார்கள்

    பழிபோடுகிறார்கள்

    சுபஸ்ரீ விவகாரத்தில் டுவிட்டரில் ஒரு ஹேஷ்டேக் கொண்டுவந்திருந்தா நல்லா இருந்திருக்கும். யார் மீது பழிபோடுவது என தெரியாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழிபோடுகிறார்களர். யாரை எங்கு உட்கார வைக்கணுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும்" என விஜய் கூறியதும் தைத்தட்டல் விண்ணை முட்டியது.

    English summary
    While speaking in the audio launch of Bigil movie actor Vijay adviced his fans to create a unique identity fr them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X