மாஸ் சம்பவம் காத்திருக்கு.. பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்

பிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Bigil Update| பிகில் படத்தின் மிக முக்கிய ரகசியம் வெளியானது.. விழாவில் நடந்த டிவிஸ்ட்

சென்னை: பிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடக்கிறது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படம் குறித்து முக்கிய அப்டேட்கள், விஷயங்கள் இந்த விழாவில் வெளியிடப்பட்டு வருகிறது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த விழாவில் கலை இயக்குனர் முத்துராஜ் பேசியது அதிகம் கவனத்திற்கு உள்ளானது. அதில், உலகிலேயே முதல்முறையாக ஒரு படத்திற்காக நாங்கள் கால்பந்து மைதானத்தையே உருவாக்கினோம். இதற்காக தனியாக மைதானத்தை உருவாக்கி, அதை பராமரித்து வந்தோம்.

எத்தனை

எத்தனை

இந்த படத்தில் விஜய்க்கு மொத்தம் இரண்டு ரோல்கள். விஜயை 10 நாட்கள் ஸ்கெட்ச் செய்து பார்த்தேன். அப்பா கேரக்டருக்கு வயதான ரோல் வேண்டும் என்று 10 நாட்கள் ஸ்கெட்ச் செய்து பார்த்தேன். ஆனால் அவர் எப்படி பார்த்தாலும் சின்னபையன் மாதிரியே தெரிந்தார்.

விஜய்

விஜய்

இந்த படத்தில் விஜய் ஆடியிருக்க ஆட்டமே வேற. சும்மா தெறிக்கவிட்டாரு. அப்பா பாத்திரத்தில் தளபதி "கிழிச்சிட்டாரு" என்றுதான் கூறவேண்டும். அந்த கதாபாத்திரம் நிச்சயம் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அப்பா பாத்திரத்தில் விஜய் நடிச்சது எனக்கு மிகவும் பிடித்தது

 கல்லூரி பையன்

கல்லூரி பையன்

கல்லூரி பையன் பாத்திரமும் கண்டிப்பாக பேசப்படும். பெண்களுக்கு அந்த பாத்திரம் ரொம்ப பிடிக்கும். நாம் எத்தனை படம் செய்கிறோம் என்று முக்கியம் இல்லை, என்ன படம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்த படத்தில் வேலை பார்த்ததற்கு பெருமைப்படுகிறேன், என்று முத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பிகில் படம்

பிகில் படம்

முதலில் பிகில் படத்தில் எத்தனை விஜய் என்று சந்தேகம் வந்தது. ஒரே விஜய் மட்டும்தானா, அவர்தான் அப்பா, மகன் என்று பீரியட் படம் போல நடிக்க போகிறாரா இல்லை, இரண்டு விஜயா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் படத்தில் இரண்டு விஜய் இருக்கிறார்கள் என்று உறுதியாகி உள்ளது.

கதை

கதை

அதன்படி படம் பீரியட் படம் கிடையாது. இரண்டு விஜயும் ஒரே நேரத்தில் வருவார்கள். இதனால் வயதான விஜய் மற்றும் மகன் விஜய் இருவரையும் திரையில் ஒரே நேரத்தில் பார்க்கலாம். அதேபோல் இளம் விஜய் கல்லூரி செல்லும் காட்சிகளும் படத்தில் வரும் என்று உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X