அடிவாங்கதான் டிக்கெட் வாங்கிட்டு வந்தோமா? பிகில் படக்குழுவிற்கு எதிராக பொங்கிய விஜய் ரசிகர்கள்!

பிகில் படத்தின் தயாரிப்பு குழுவிற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கடுமையாக பொங்கி இருக்கிறார்கள்.

Recommended Video

Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

சென்னை: பிகில் படத்தின் தயாரிப்பு குழுவிற்கு எதிராக விஜய் ரசிகர்கள் கடுமையாக பொங்கி இருக்கிறார்கள். நேற்று நடந்த பிரச்சனை ஒன்றால் அவர்கள் படக்குழுவிற்கு எதிராக பொங்கி உள்ளனர்.

நேற்று சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பெரிய வைரலாகி உள்ளது.

அதேபோல் பிகில் படத்தின் முக்கிய விஷயங்கள், கருத்துக்கள், கதையின் முக்கிய அம்சங்கள் குறித்த விஷயங்களும் இந்த விழாவில் வெளியானது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

விழாவிற்கு முன்பாகவே விழா நடக்கும் சாய் ராம் கல்லூரிக்கு வெளியே பயங்கரமான கூட்டம் கூடியது. இதனால் பெரிய அளவில் அங்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது. அந்த சாலை பகுதியே இதனால் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டு ஸ்தம்பித்தது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இதனால் விழாவிற்கு விஜயின் அப்பா சந்திரசேகர் வருவதற்கே நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த விழாவிற்கு மொத்தம் 20 ஆயிரம் பேர் வரை வந்திருந்தனர். பல ஊர்களில் இருந்து டிக்கெட் வாங்கி, இந்த விழாவிற்கு ரசிகர்கள் வந்திருந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் வெறும் 10 ஆயிரம் பேர் மட்டுமே இந்த விழாவை பார்க்க முடியும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால் போலீசார் உடன் ரசிகர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் விழா அரங்கத்திற்கு வெளியே போலீசாருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

என்ன சண்டை

என்ன சண்டை

அதன்பின் அந்த சாலையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் சில ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன கோபம்

என்ன கோபம்

இதையடுத்து தயாரிப்ப்பாளர் குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் மட்டும்தான் வர முடியும் என்றால், ஏன் 20 ஆயிரம் பேருக்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். இது என்ன மக்களை ஏமாற்றும் வேலையா என்று ரசிகர்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X