For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேனர் அரசியல் முதல்.. இந்தி எதிர்ப்பு வரை.. ''பிகில்'' பேச்சுக்காக மாஸாக தயாராகும் விஜய்!

|
பிகில் ஆடியோ லான்ச் நாடாகும் அரங்கம் வீடியோ

சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேனர் அரசியல், இந்தி எதிர்ப்பு என்று பல விஷயங்கள் குறித்து பேச போகிறார் என்று கூறி உள்ளனர்.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமாக பிகில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் மீதமுள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது.

என்ன கடைசியில் பாலா இவர் கூட படம் பண்ணுறாரா? அதுவும் ரீமேக்.. கேட்டா ஆடி போயிடுவீங்க!

என்ன பேசுவார்

என்ன பேசுவார்

இந்த நிலையில் இன்று நடக்கும் விழாவில் நடிகர் விஜய் பேனர் பிரச்சனை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுகிறது. தன்னுடைய ரசிகர்கள் இனிமேல் எந்த படத்திற்கும் பேனர் வைக்க கூடாது என்று ஏற்கனவே விஜய் கூறிவிட்டார். அவர்களும் இதுவரை வைத்த பேனர்களை நீக்கிவிட்டனர்.

பேனர் முக்கியம்

பேனர் முக்கியம்

இந்த நிலையில் பேனர் காரணமாக உயிர் இழந்த சுபஸ்ரீ குறித்து கண்டிப்பாக விஜய் பேசுவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் பெண்கள் பாதுகாப்பு, பெண் விளையாட்டு என்று பெண்களை மையப்படுத்தி விஜயின் பேச்சு தயாராகி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்தி

இந்தி

இதுபோக இந்தி திணிப்பு குறித்தும் விஜய் பேச இருக்கிறார். ஆம் இந்தி திணிப்பு பிரச்சனை குறித்து நடிகர் கமல்ஹாசன் தெளிவான கருத்தை கூறிவிட்டார். இரண்டு பக்கமும் சப்போர்ட் செய்யாமல் ''மய்யமாக'' ஒரு கருத்தை ரஜினி தெரிவித்துவிட்டார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் நடிகர் விஜய் மிகவும் அழுத்தமான ஒரு கருத்தை தெரிவிக்க போகிறார் என்று கூறுகிறார்கள். இன்று அவர் பேச போகும் விஷயம் கண்டிப்பாக வைரலாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பொருளாதார சரிவு குறித்து விஜய் கிண்டலாக இன்று பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஏற்கனவே இப்படி

ஏற்கனவே இப்படி

ஏற்கனவே நடிகர் விஜய் மெர்சல் மற்றும் சர்க்கார் பட விழாவில் பேசியது எல்லாம் பெரிய அளவில் வைரலாகியது. குட்டி குட்டி கதை சொல்லி, நிறைய அரசியல் கருத்துக்களுடன் விஜய் பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றும் அதேபோல பேச்சை விஜய் உருவாக்கி வருகிறாராம்.

சூர்யா போல

சூர்யா போல

நடிகர் சூர்யா நிறைய மேடைகளில் மிகவும் தெளிவான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சூர்யா நிறைய வரலாற்று புள்ளி விவரங்களை கூட எடுத்துக்காட்டாக கூறி பேசி வருகிறார். சூர்யா போலவே விஜய்யும் நிறைய வரலாற்று ஆதாரங்களை சுவாரசியமாக சொல்ல போகிறார் என்றும் கூறுகிறார்கள்.

English summary
BIGIL Audio launch: Vijay may speak on banner and Hindi issue today on stage.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more