பிகில் விழாவில் விஜய் சொன்ன ‘அந்த’ குட்டி கதை.. புரிய வேண்டியவங்களுக்கு நிச்சயம் புரிஞ்சிருக்கும்!

வழக்கம் போல் பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் ஒரு குட்டி கதை சொல்லி அசத்தினார் விஜய்.

Recommended Video

Bigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்

சென்னை: பிகில் இசை வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் ஒரு குட்டி கதை கூறி அரங்கை அதிரவைத்தார் நடிகர் விஜய்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று நடந்து முடிந்திருக்கிறது பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா. பலரும் எதிர்பார்த்தது போலவே இந்த விழாவில் அரசியல் தொடர்பாக சில விஷயங்களை கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய்.

அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி உள்ளது. விழா மேடைகளில் பேசும் போது, எப்போதும் ஒரு குட்டி கதை சொல்வது விஜய்யின் வழக்கம். அது போல் நேற்றும் அவர் ஒரு குட்டி கதை சொல்லி அசத்தினார்.

பூக்கடை வேலை

பூக்கடை வேலை

விஜய் சொன்ன குட்டிக் கதை இது தான், " ஒருவர் பூக்கடையில் வேலை செய்து கொண்டு இருந்தார். கிட்டத்தட்ட பொக்கே ஷாப் என வைத்துக்கொள்ளுங்கள். திடீர் என அவருக்கு வேலை போய்விட்டது.

பட்டாசு கடை வேலை

பட்டாசு கடை வேலை

என்ன செய்வது என முழித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஒரு பட்டாசு கடையில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த கடைக்காருக்கு இந்த நபர் முன்னர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்பதே தெரியாது. வேண்டப்பட்ட ஒருவர் கூறியதால் அந்த நபரை வேலைக்கு சேர்த்துவிட்டனர்.

வியாபாரம் இல்லை

வியாபாரம் இல்லை

பட்டாசு கடையில் உட்கார்ந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார் அந்த நபர். ஆனால் அவர் வந்ததில் இருந்து ஒரு வெடி கூட வியாபாராம் ஆகவில்லையாம். என்ன என விசாரித்த போது தான் தெரிந்தது, அந்த நபர் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வந்து பட்டாசு மீது தெளித்து இருக்கிறார்.

கதையின் நீதி

கதையின் நீதி

பாவம் அவர் மீது எந்த தவறும் இல்லை. அது அவரோட தொழில்பக்தி. அவருக்கு தெரிந்த வேலையை அவர் செய்திருக்கிறார். இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் விஷயம் என்னவென்றால், இந்த வேண்டியவர் வேண்டாதவர் என்பதை எல்லாம் விட்டுட்டு திறமைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்கு உட்கார வைக்க வேண்டும்" எனக் கூறி முடித்தார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X