விஜய் செய்த ஒரு செயல்.. மனம் நிறைந்த ரசிகர்கள்.. பிகில் விழாவில் நடந்த அசத்தல் சம்பவம்.. வீடியோ!
சென்னையில் நடந்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: சென்னையில் நடந்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடக்கிறது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா தொடங்கி நடந்து வருகிறது.
விழா மேடைக்கு விஜய் வந்துள்ளார். இந்த ஆடியோ வெளியீட்டு விழா தொடங்கியதே மிகவும் பரபரப்பாக இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

சாய் ராம்
விழாவிற்கு முன்பாகவே விழா நடக்கும் சாய் ராம் கல்லூரிக்கு வெளியே பயங்கரமான கூட்டம் கூடியது. இதனால் பெரிய அளவில் அங்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் விழாவிற்கு விஜயின் அப்பா சந்திரசேகர் வருவதற்கே நீண்ட நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பு ஏற்பட்டது
அதன்பின் அந்த சாலையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அதேபோல் சில ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் உடை
இந்த விழாவிற்கு நடிகர் விஜய் கருப்பு உடையில் வந்து இருந்தார். முழுக்க முழுக்க கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து வந்து இருந்தார். அரசியல் குறியீடு போல அவரது உடை இருந்ததாக எல்லோரும் டிவிட்டரில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

கால்பந்து எப்படி
இந்த படம் மூலம் கால்பந்து குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். தமிழர்களுக்கு இந்த படத்திற்கு பிறகு கால்பந்து மீது காதல் வரும். இனி தமிழர்கள் கால்பந்தை விரும்பி பார்ப்பார்கள் என்று படத்தின் எடிட்டர் குறிப்பிட்டது பெரிய வரவேற்பை பெற்றது.

ஆனந்த்ராஜ் என்ன சொன்னார்
அதேபோல் படத்தில் நடித்திருக்கும் ஆனந்த்ராஜ், இந்த படத்தின் பெயர் பிகில். இந்த படம் வெளியான பின் பலருக்கும் ஏற்பட போகிறது திகில். விஜய் எனக்கு நண்பராகிவிட்டார். அவரின் மகன் இளையதளபதி சஞ்சய் உடன் நான் படம் பண்ண வேண்டும், என்று குறிப்பிட்டார்.
செம
இந்த விழா அரங்கிற்குள் உள்ளே வந்த விஜய் தனது போனில் பிளாஷ் லைட்டை ஆன் செய்து ரசிகர்களை நோக்கி காட்டினார். அவர் கை அசைத்ததை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் எல்லோரும் தங்கள் மொபைல் லைட்டை ஆன் செய்து கையசைத்தார்கள்.

செம வைரல்
இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த விழாவில் நடந்த இந்த விஷயம் பல ரசிகர்களை கவர்ந்தது. விஜய் புதிய முறையில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கிறார் என்று பலர் டிவிட் செய்துள்ளார். இதற்கு முன் சர்க்கார் பட விழாவிலும் இதேபோல் மொபைல் பிளாஷ் மூலம் ரசிகர்கள் கையசைத்து டிரெண்ட் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











