twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிகில் ஆடியோ ரிலீஸ்... லைவ்வில் மண்ணை அள்ளிப் போட்ட சன் டிவி... செம கடுப்பில் ரசிகர்கள் !

    பிகில் இசை வெளியீட்டு விழாவை நேரடியாக ஒளிபரப்ப இயலாது என படக்குழு அறிவித்துள்ளது.

    |

    சென்னை: விஜய்யின் பிகில் இசை வெளியீட்டு விழாவை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப இயலாது என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பிகில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மூன்றாவது படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    தெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்துதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து

    தீபாவளி ரிலீஸ்

    தீபாவளி ரிலீஸ்

    ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்தமாதம் தீபாவளி ரிலீசாக இப்படம் ரிலீசாக உள்ளது.

    நேரடி ஒளிபரப்பு இல்லை

    நேரடி ஒளிபரப்பு இல்லை

    இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. சமீபகாலமாக இது போன்ற விழாக்களை யுடியூப்பில் லைவ்வாக வெளியிடும் பழக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது. எனவே, பிகில் பட இசை வெளியீட்டு விழாவையும் சுடச்சுட நேரடியாக பார்க்கலாம் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    நிச்சயம் இந்த விழாவில் விஜய் ஏதாவது அரசியல் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே உள்ளது. அதனாலேயே நெட்டிசன்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களது ஆசையில் மண்ணைப் போட்டதைப் போல், புதிய அறிவிப்பு ஒன்றை பிகில் படக்குழு வெளியிட்டுள்ளது.

    தொழில்நுட்ப பிரச்சினைகள்

    தொழில்நுட்ப பிரச்சினைகள்

    அதில், ‘பிகில் பட இசை வெளியீட்டு விழா எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தருணம். ஆனால் அதனை லைவ்வாக ஒளிபரப்புவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. வார வேலைநாள் என்பதால் அதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன' எனத் தெரிவித்துள்ளார்.

    சன் டிவியில் ஒளிபரப்பு

    அதே சமயம், அந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 22-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அன்றைய தினம் டிஆர்பி எகிறும், புதிய சாதனை படைக்கும் என்றும் அர்ச்சனா கல்பாதி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

    டிஆர்பி பயம்

    முன்னதாகவே யுடியூப்பில் லைவ் செய்து விட்டால், சன் டிவியில் ஒளிபரப்பும் போது நிறைய பேர் பார்க்க மாட்டார்கள் என்பதால் தான் இப்படி செய்து விட்டார்கள் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். விஜய் பேச்சை நேரடியாக கேட்கலாம் என்றால், இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியதாகி விட்டதே என கவலையடைந்துள்ளனர்.

    English summary
    The producer of Vijay's Bigil movie, directed by Atlee, Archana Kalpathy said that the film's audio launch will not be live streamed in web. It will be telecasted in Sun TV two days after.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X