5 நாளாகியும் கூட்டம் குறையல.. இதுதான் விஜய்யின் வெறித்தனம்!

விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 5 நாட்களை கடந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது.

Recommended Video

Bigil Vs Kaithi Box Office : வெறித்தனம் ஓயவில்லை, நிரம்பி வழியும் கூட்டம்-வீடியோ

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை பிகில் திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்துள்ளார். நடிகர் விஜய், அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என இரு வேடங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

திங்கட்கிழமையுடன் விடுமுறை நாட்கள் முடிந்த போதிலும், செவ்வாயன்றும் பிகில் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றிநடைபோடுகிறது.

வெறித்தனம்

வெறித்தனம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், செவ்வாய்க்கிழமையான நேற்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வெறித்தனம் காட்டி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மழை பொழிந்து வருவதால், நேற்றும் பல பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு இருந்தன. இதனால், பிகில் திரையிட்ட தியேட்டர்களுக்கு மக்கள் படையெடுத்ததே செவ்வாய்க்கிழமையும் 95 சதவீதம் அரங்குகள் நிறைய காரணமாம்.

சென்னையில் 5ம் நாள் வசூல்

சென்னையில் 5ம் நாள் வசூல்

என்னதான், விமர்சகர்கள் பிகில் படத்திற்கு கலவையான விமர்சனங்களை முன்வைத்தாலும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி குடும்பங்கள் மற்றும் பெண்கள் கொண்டாடும் வகையில் மாஸ் என்டர்டெயினராக பிகில் திரைப்படம் உருவாகியுள்ளதால், சென்னையில் நேற்று மட்டும் சுமார் 84 லட்சம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது. கடந்த 5 நாட்களில் சென்னையில் மொத்தம் 7.82 கோடி ரூபாய் வரை பிகில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்

தமிழ்நாடு முழுவதும்

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள விஜய்யின் ஆக்‌ஷன் கமர்ஷியல் பிகில் திரைப்படம் தமிழகமெங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் வெறித்தனம் பாடல்களுக்கு, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆட்டம் போட்டால், சிங்கப்பெண்ணே பாடலுக்கு பெண்களின் குத்தாட்டம் தியேட்டர்களை அதிரவைத்து வருகிறது.

செவ்வாய் கிழமை மட்டும் 10 கோடி ரூபாய் வசூலை அள்ளிய பிகில் திரைப்படம், கடந்த 5 நாட்களில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 85 கோடி ரூபாய் வசூலை குவித்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

மத்த ஏரியால எப்படி?

மத்த ஏரியால எப்படி?

கில்லி படத்தில், இந்த ஏரியா, அந்த ஏரியா, உங்க ஏரியா, எங்க ஏரியா இல்ல ஆல் ஏரியால ஐயா கில்லி டா, என விஜய் சொல்வது போல, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் வட இந்தியாவிலும் பிகில் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகிறது. ஆனால், செவ்வாய் கிழமையான நேற்று திங்கட்கிழமை வரை வந்த வசூலின் அளவு சற்று குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிகில் வசூல்

உலகளவில் பிகில் வசூல்

அமெரிக்காவில் மட்டும் விஜய்யின் பிகில் திரைப்படம் ஒரு மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது. துப்பாக்கி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் படமான பிகில் அமெரிக்காவில் இந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை கல்லா கட்டியுள்ளது. இதுவரை பிகில் படம் உலகம் முழுவதும் கடந்த 5 நாட்களில் 180 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாம். இந்த வார இறுதிக்குள் 200 கோடி கிளப்பில் பிகில் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X