பிகில் 100 கோடி.. விஸ்வாசம் 125 கோடி.. தரமான சம்பவம் செஞ்சது நாங்க தான்.. தல- தளபதி ரசிகர்கள் மோதல்
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் வசூலை விட விஸ்வாசம் படத்தின் வசூல் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே எப்போதுமே போட்டியும், சண்டை சச்சரவுகளும் அதிகம். இரண்டு நடிகர்களின் படங்களை ஒப்பிட்டு, யாருடைய படம் நன்றாக ஓடுகிறது, எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதை வைத்து ரசிகர்களிடைய மோதல் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி கடந்த வாரம் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் வசூல் குறித்து தினம் தினம் ஒரு தகவல் வெளியாகி வந்தது. அதனை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினர்.
இந்நிலையில் பிகில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் என்ன என்பது தெரியவந்துள்ளது. படத்தில் வெளியிட்ட ஸ்கிரீன்சீன் நிறுவனம், பிகில் திரைப்படத்தின் ஒருவார வசூல் ரூ.100 கோடி என தெரிவித்துள்ளது.
இதேபோல் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், அப்படம் 8 நாட்களில் ரூ.125 வசூலித்ததாக தெரிவித்துள்ளது. இதை வைத்து விஜய், அஜித் ரசிகர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
விஸ்வாசம் படத்திற்கு ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கியுள்ள அஜித் ரசிகர்கள், விதவிதமாக மீம்ஸ் போட்டு, விஜய் ரசிகர்களை கேலி செய்து வருகின்றனர். பதிலுக்கு விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களுக்கு கவுண்டர் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications