இலங்கையிலும் கோல் போட்ட விஜய்.. வசூல் எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் இலங்கையில் கடந்த 9 நாட்களில் சுமார் 8 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா அய்யர், விவேக், யோகி பாபு, ஆனந்த்ராஜ் என பலர் நடிப்பில் வெளியான படம் பிகில்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசான பிகில் இன்றுடன் பத்து நாட்களை கடந்துள்ள நிலையில், மொத்தம் 250 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் வெளியான விஜய் படங்களிலேயே பிகில் படத்திற்கு முதல் வார கலெக்‌ஷன் அமோகமாக வசூல் ஆகியுள்ளதாம்.

250 கோடி

250 கோடி

உலகம் முழுவதும் விஜய்யின் பிகில் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தியின் கைதி படம், தமிழ்நாடு அளவு நல்ல ரீச் கொடுத்தாலும், அதிக தியேட்டர்களில் வெளியான பிகில் படம் ஒரு வாரம் ஆகியும் கூட்டம் குறையாமல் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறதாம். இதனால், ஞாயிற்றுக் கிழமை வசூலுடன் சேர்த்தால், 250 வசூலை பிகில் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 230 கோடி வசூலை பிகில் பெற்றுள்ளதாம்.

கூட்டம் குறையல

கூட்டம் குறையல

பிரபல திரையரங்கமான ராம் முத்துராம் சினிமாஸ், பொங்கல் பண்டிகையை போல தீபாவளி பண்டிகையும் தொடர்ந்து பத்து நாட்களாக கூட்டம் குறையாமல் மக்கள் திரையரங்கிற்கு வந்து பிகில் படத்தை பார்த்து செல்கின்றனர் என கூறியுள்ளது. மேலும், கொண்டாட்டத்திற்கான இடமாக ராம் முத்துராம் சினிமாஸை மாற்றியதற்காக பிகில் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

இலங்கையிலும் வசூல் வேட்டை

இலங்கையிலும் வசூல் வேட்டை

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் கடந்த 9 நாட்களில் இலங்கையில் மட்டும் 8 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் நாளான இன்றும் பல திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிவதால், மேலும் 2 கோடிகளை இன்றைய தினம் பிகில் வசூலிக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

இதுவரை வெளியான விஜய் படங்கள் இலங்கையில் செய்யாத சாதனையை பிகில் படம் நிகழ்த்தியுள்ளதாகவும், இலங்கையில் பிகில், ஹிட் பட வரிசையில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தது எப்படி இருக்கும்

அடுத்தது எப்படி இருக்கும்

தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி திரைப்படங்கள் உலகளவில் வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகின்றன. இந்நிலையில், கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கி வரும் தளபதி 64 படத்தின் வசூல் வேட்டை பிகிலை விட டபுள் மடங்காக இருக்கும் என தளபதி ரசிகர்கள், விஜய் ஹேட்டர்ஸ்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X