செம செம.. ரிலீஸான 4 நாள்ல இவ்வளோ வசூலா.. ரஜினியை தொடர்ந்து சாதனை படைத்த விஜய்!

சென்னை: பிகில் படம் ரிலீஸான முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூலை குவித்துள்ளது என்ற தகவல் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது பிகில் திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அட்லீயும் நடிகர் விஜயும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்தனர்.

ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பிகில் படம் ரிலீஸாவதற்கு முன்பே பெரும்பாலான தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

வெற்றி நடை

வெற்றி நடை

படம் எப்போது ரிலீஸாகும் என காத்திருந்த விஜயின் ரசிகர்கள் வெள்ளிக்கிழமை முதலே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். உலகம் முழுவதும் பிகில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிநடை போட்டு வருகிறது.

ரூ.100 கோடி வசூல்

ரூ.100 கோடி வசூல்

படம் குறித்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களில் உலகம் முழுக்க 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக நேற்று தகவல் வெளியானது.

ரூ.150 கோடி வசூல்

ரூ.150 கோடி வசூல்

இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் பிகில் படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு இரண்டாவது தமிழ் ஹீரோ ஒருவரின் படம் 4 நாட்களில் 150 கோடி ரூபாயை குவித்திருக்கிறது என்றால் அது விஜயின் பிகில் படம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியளவில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களில் அதிக வசூலை குவித்து பிகில் படம் டாப் 5ல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் 4 நாட்களில் 150 கோடி ரூபாய்க்கு மேல் குவித்து சாதனை படைத்திருப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X