தமிழ் ராக்கர்ஸிடம் சிக்காத பிகில்.. சொன்ன மாதிரியே செஞ்ச அக்கா!

பிகில் திரைப்படம் அதிகாலையிலேயே வெளியாகிய நிலையில், இதுவரை தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் சிக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

Recommended Video

Bigil movie review | பிகில் படம் எப்படி இருக்கு ?

சென்னை: பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியான உடனே போட்டி போட்டுக் கொண்டு திருட்டுத்தனமாக ஆன்லைன் பைரசி தளமான தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியாவது வழக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள நடிகர் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் இதுவரை தமிழ்ராக்கர்ஸில் வெளியாகவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

பிகில் மற்றும் கைதி படங்களை ஆன்லைனில் திருட்டுத் தனமாக வெளியிடக்கூடாது என கோர்ட் உத்தரவு வாங்கியுள்ள நிலையில், ஆன்லைன் பைரசியில் இருந்து இரண்டு படங்களும் தப்பித்துள்ளன.

அக்காவின் கைவரிசை

அக்காவின் கைவரிசை

பிகில் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகாமல் தடுக்க ஏதேனும் வழி செய்துள்ளீர்களா என பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கோர்ட் மூலம் தடை உத்தரவு வாங்கியுள்ளோம், மேலும், அனைத்து ஏரியாக்களிலும் பைரசி தடுப்பு பிரிவை உருவாக்கி கண்காணித்து வருகிறோம் என்று கூறியிருந்தார்.

வரவில்லை

வரவில்லை

தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட எந்தவொரு ஆன்லைன் பைரசி தளங்களிலும் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் இதுவரை வெளியாகவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும், பேஸ்புக் லைவ் போன்றவற்றிலும் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

மைக்கேல் இன்ட்ரோ லீக்

மைக்கேல் இன்ட்ரோ லீக்

விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் மொபைல் மூலம் எடுத்த சில காட்சிகள் இணையத்தில் லீக்காகி வருகின்றன. குறிப்பாக பட்டாசை கொளுத்தி போலீஸ் மேல் வீசி எறியும் மைக்கேல் விஜய்யின் இன்ட்ரோ காட்சி மற்றும் ராயப்பன் விஜய்யின் மாஸ் இன்ட்ரோ காட்சிகள் பலரது வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாக உலாவருகின்றன.

கைது

கைது

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தின் அதிகாலை காட்சியை வெளியிடாத நிலையில், சாலையில் ரகளையில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதேபோன்று வேறு சில இடங்களிலும் பிகில் படம் திரையிடாததை கண்டித்து விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X