பிகில் தென்றலுக்கு அடித்தது ஜாக்பாட்.. தடம் தெலுங்கு ரீமேக்கான ‘ரெட்’ படத்தில் நடிக்கிறார்!

ஹைதராபாத்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

தமிழில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த தடம் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

டோலிவுட் நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தடம் படத்தின் ரீமேக்குக்கு 'ரெட்' என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படத்தில் பிகில் படத்தில் தென்றலாக நடித்து அசத்திய அம்ரிதா அய்யர் இணைந்துள்ளார்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டை

சட்டத்தில் இருக்கும் ஓட்டை

சட்டத்தில் இருக்கும் ஓட்டையைக் கொண்டு குற்றத்தை செய்தும் எப்படி தப்பிக்கலாம் என வெளிநாடுகளில் நடந்த உண்மை கதைகளின் அடிப்படையில் உருவான படம் தான் தடம். ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வைத்து தப்பிக்கும் கதையை அருண் விஜய் நடிப்பில் அசத்தலாக எடுத்து மகிழ் திருமேனி தமிழில் வெற்றி தடத்தை பதித்தார்.

மாஸ் ஹிட்

மாஸ் ஹிட்

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் கதாபாத்திரத்தில் கலக்கிய அருண் விஜய், தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் தியாகுவாக அசத்திய அருண் விஜய், தடம் படத்தில் கவின், எழில் என இரு கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டினார்.

பிகில் தென்றல்

பிகில் தென்றல்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் சமீபத்தில் 100 நாட்களை கடந்தது. இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக அம்ரிதா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பிகில் படத்திற்கு பிறகு அம்ரிதா என்ற பெயரை விட தென்றல் என்றே பலரும் இவரை அழைத்து வருகின்றனர்.

டோலிவுட் செல்லும் தென்றல்

தமிழில் பிகில் படத்தில் நடிக்கும் முன்னதாக படைவீரன், காளி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் அம்ரிதா. ஆனாலும், பிகில் படத்திற்கு பிறகு தான் இவருக்கான மார்க்கெட் அதிகரித்துள்ளது. தெலுங்கில் ரீமேக் ஆகி வரும் தடம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அம்ரிதா. இதுகுறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

என்ன ரோல்

என்ன ரோல்

தமிழில் வெளியான தடம் படத்தில் வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட் மற்றும் தன்யா ஹோப் என மூன்று நாயகிகள் நடித்திருந்தனர். தெலுங்கில் உருவாகி வரும் தடம் படத்தின் ரீமேக்கான ரெட் படத்தில் அம்ரிதா அய்யருக்கு என்ன ரோல் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தெலுங்கில் நிவேதா பெத்துராஜ், மாளவிகா சர்மா மற்றும் அம்ரிதா அய்யர் நடித்து வருவதால், தமிழில் ஸ்மிருதி வெங்கட் நடித்த ரோலில் அம்ரிதா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்யூட் புகைப்படங்கள்

பிகில் படத்தை தொடர்ந்து அம்ரிதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றனர். தனது ரசிகர்களை உற்சாகப்படுத்த அம்ரிதாவும் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். விரைவில் தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: red thadam தடம் ரெட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X