பிக்பாஸ் கவினுக்கு ஜோடியான பிகில் நடிகை.. அப்போ அவங்களோட எப்போ? ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக பிகிலில் தென்றலாக நடித்த அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட கவினுக்கு, தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

வேட்டையனாக சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் போதே, கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்த நிலையில், தற்போது, அது இரட்டிப்பாகி உள்ளது என்றே சொல்லலாம்.

விஜய் டிவியும்.. கவினும்

விஜய் டிவியும்.. கவினும்

விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி மெகா சீரியலில் வில்லன் வேட்டையனாக நடித்த கவின், கொஞ்ச நாட்களிலேயே, சரவணனாகவும் நடித்து, தமிழ் சீரியல் ரசிகைகளை பெருமளவில் கவர்ந்தார். மேலும், விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம், மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தையும் கவின் பெற்றார்.

லாஸ்லியா காதல்

லாஸ்லியா காதல்

பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக காட்டப்பட்டது. ஆனால், தற்போது, லாஸ்லியா ஒரு புறம் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் கவின் புதிய படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

பிகில் தென்றல்

பிகில் தென்றல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், கேப்டன் தென்றலாக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்த நடிகை அம்ரிதா அய்யர், தற்போது, பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளாராம். ஏற்கனவே படைவீரன், காளி உள்ளிட்ட படங்களிலும், இவர் நாயகியாக நடித்துள்ளார்.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

சத்ரியன், நட்புன்னா என்னான்னு தெரியுமா படங்களை தொடர்ந்து கவின் நடித்திருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா அய்யர் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் வினீத், தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவங்ககூட எப்போ?

அவங்ககூட எப்போ?

நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும் நடிகை லாஸ்லியா ஒரே சமயத்தில், இரண்டு படத்தில் கமீட் ஆகி நடித்து வருகிறார். கவின் - லாஸ்லியா காதலித்து வந்த நிலையில், வெள்ளித்திரையிலாவது இவர்கள் ஜோடியாக இணைந்து நடிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் கவிலியா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் படம்

மேலும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஒரு படத்திலும், கவின் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு முன்னதாக வெளியானது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிக்கும் புதிய படத்தில், பிக்பாஸ் கவினும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X